IGCAR Kalpakam Recruitment: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வேலை...தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் உள்ளே..
IGCAR Kalpakam Recruitment: சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
IGCAR Kalpakam Recruitment: இந்திய அணுசக்கி துறையின் கீழ் இயங்கி வரும் சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
இளநிலை ஆராய்ச்சி உதவியாளர் (Junior research fellowships)
காலி இடங்கள் - 60 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
கல்வி தகுதியானது, B.E/B.Tech/B.SC. Engg/B.SC.Tech/MSC/M.E/M.Tech படித்திருக்க வேண்டும். எனவே இந்த பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் http://www.igcar.gov.in/recruit/JRF_Adv01_2022.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி:
நவம்பர் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.igcrect.in/rect/
வயது:
18 முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும் OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுளும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உள்ளது. முழு விவரங்களுக்கு விண்ணப்பத்தாரர்கள் இந்த அறிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். http://www.igcar.gov.in/recruit/JRF_Adv01_2022.pdf
வருமானம் - ரூ. 21,000 - 40,000 வரை
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு நடைபெறும். எழுதுத் தேர்வில் தகுதியுடையவர்கள் நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நாள்
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 04.12.2022
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 05.12.2022
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் | IGCAR Recruitment 2022 | https://www.igcrect.in/rect/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், பிரிணட் எடுத்து கொள்ள வேண்டும்.
- பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பிரிண்ட் அவுட்டில் ஒட்டி கையொப்பமிட வேண்டும்.
- தேவையான ஆவணங்களை நகலுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி
The Assistant Personnel Officer [R] Recruitment Section Indhira Gandhi Center Atomic Research Kancheepuram District, Kalpakkam - 603 102, Tamilnadu.