Job Alert : தேசிய வைராலஜி நிறுவனத்தில் வேலை வேண்டுமா..? என்ன தகுதி வேண்டும்..? எப்படி விண்ணப்பிப்பது..?
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் பணியாற்றுவதற்காக வெளியாகியுள்ள புதிய வேலைவாய்ப்புகளை கீழே காணலாம்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (Indian Council of Medical Research ) என்றழைக்கப்படும் ஐ.சி.எம்.ஆர். -இன் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வைராலஜி நிறுவனத்தில் (national virology institute) திட்ட உதவியாளர், டெக்னிக்கல், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்:
Project Assistant(Research Assistant)
Project Assistant (Technical Assistant)
Project Technical-III(Lab Technician)
Project Multitasking Staff
ஊதிய விவரம்:
மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.
வயதுவரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 30-வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவதொரு அறிவியல் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:
Project Technical-III(Lab Technician)
மாதம் ரூ.18,000 வழங்கப்படும்.
கல்வித் தகுதி:
அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் எம்எல்டி, ரோடியோலஜி, ரோடியோகிராபி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி:
Project Multitasking Staff
மாத ஊதியமாக ரூ.15,800 வழங்கப்படும்.
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 25-க்குள் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத்த தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
http://forms.gle/HadnoeHKRTKMPWr7 என்ற கூகுள் லிங்கில் உள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான ஆவணங்களின் நகல்களையும் இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
முகவரி:
The Director,
ICMR-NIV,
Pune.
மேலும் விவரங்கள் அறிய www.niv.co.in என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2022
மேலும் வாசிக்க..
TET 2022: ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது தெரியுமா..? முழு விவரத்தை அறிவித்த ஆசிரியர் தேர்வு வாரியம்