CECRI Recruitment: டிப்ளமோ, டிகிரி முடித்தவரா? தொழில்பழகுநர் பயிற்சி வாய்ப்பு - விவரம்!
CSIR - CECRI Recruitment: மத்திய அரசு நிறுவனத்தில் உள்ள தொழில்பழகுநர் பயிற்சி பற்றிய விவரங்களை காணலாம்.
காரைக்குடியில் உள்ள சென்ட்ரல் எலக்ட்ரோகெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR-Central Electrochemical Research Institute) உள்ள தொழில்பழகுநர் பயிற்சி வாய்ப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பயிற்சி விவரம்:
ஐ.டி.ஐ. பிரிவு
- ஃபிட்டர்
- மெக்கானிஸ்ட்
- எலக்ட்ரிசியன்
- எலக்ரானிக்ஸ் மெக்கானிக்
- ஃப்ரிட்ஜ் & ஏ.சி. மெக்கானிக்
- Draughtsman (Civil)
- Turner
- ப்ளம்பர்
- Carpenter
- Welder
- PASAA
மொத்த பயிற்சி இடங்கள் - 29
டெக்னீசியன் டிப்ளமோ பிரிவு
- சிவில் பொறியியல்
- மெக்கானிக்கல் பொறியியல்
- எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல்
- எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பொறியியல்
மொத்த பயிற்சி இடங்கள் - 05
பட்டப்படிப்பு பிரிவு
- கேன்டீன் நிர்வாகம்
- அலுவலக உதவியாளர்
மொத்த பயிற்சி இடங்கள் - 2
கல்வித் தகுதி:
- ஐ.ஐ.டி. துறையில் விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- டிப்ளமோ பிரிவிற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பட்டப்படிப்பு பிரிவிற்கு விண்ணப்பிக்க ஹோட்டல் நிர்வாகம், கேட்டரிங் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் மூன்றாண்டுகால இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவல உதவியாளர் பிரிவிற்கு விண்ணப்பிக்க வேதியியல், இயற்பியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- 2021/2022/2023/2024 அகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
ஐ.டி.ஐ. - குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
டெக்னீசியன் டிப்ளமோ - 18 வயது முதல் 24 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.
இளங்கலை பட்டம் - 21 வயது முதல் 26 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும்.
உதவித் தொகை விவரம்:
- ஐ.டி.ஐ. - ரூ.8050/-
- டெக்னீசியம் டிப்ளமோ - ரூ.8,000/-
- இளங்கலை பட்டம் - ரூ.9,000/-
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணபிக்க வேண்டும்.
ஐ.டி.ஐ. பிரிவில் விண்ணப்பிக்க https://www.apprenticeshipindia.gov.in/ - என்ற இணைப்பைக் க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
டெக்னீசியன் டிப்ளமோ மற்றும் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கhttps://nats.education.gov.in/ - என்ற இணைப்பை பயன்படுத்த வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள் குறித்த விவரம்:
30.07.2024 - காலை 9.00 மணி முதல்:
Diploma in Mechanical Engineering, ECE, EEE and Civil Engineering, Bachelor’s Degree in Physics / Chemistry and Guest House and Canteen Management
31.07.2024 காலை 9:00 மணி முதல்:
ITI – Fitter, Machinist, Mechanic Ref. & A/c, Welder, Draughtsman (Civil), Plumber, Carpenter
01.08.2024 காலை 9:00 மணி முதல்:
ITI – Electrician, Wireman, PASAA, Electronics Mechanic, Turner
நேர்காணல் நடைபெறும் முகவரி:
CSIR- Central Electrochemical Research Institute,
College Road,
Karaikudi
இது தொடர்பாக முழு விவரங்களை காணhttps://www.cecri.res.in/Portals/0/Careers/APP-06-2024_AdvtCopy.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
தொடர்புக்கு - 04565 – 241219 / 218 அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம் (09.00 a.m. to 5.30 p.m.)
மின்னஞ்சல் முகவரி - recruit@cecri.res.in
இதற்கு நேர்காணல் நடைபெறும் நாளுக்கு முன்பு ஆன்லைன் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.