Bharathiar University: பாரதியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க இன்றே கடைசி; முழு விவரம் இதோ!
பாரதியார் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த முழுத் தகவல்.
பாரதியார் பல்கலைக்கழகம்:
கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணபிக்க இன்றே கடைசி நாள். இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். மறந்துடாதீங்க,
பணி விவரம்:
Technical Officer
Programmer
Technical Assistant
Lab Attender
பாரதியார் பல்கலைக்கழகத்தில் மத்திய மனிவள மேம்பாட்டு துறை சார்பில் செயல்பட்டுவரும் (Bharathiar Cancer Theranostics Research Centre) கேன்சர் சிகிச்சை சென்டரில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான பணியிடம் ஒராண்டு என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
தொழில்நுட்ப அதிகாரி பணிக்கு இளங்கலை பொறியியலில் Instrumentation பிரிவு அல்லது பி.இ. எலக்ட்ரானிக்ஸ் அல்லது இந்த துறையில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதோடு மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant) பணிக்கு எலக்ட்ரானிஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
Programmer பதவிக்கு கம்யூட்டர் சயின்ஸ் பிரிவில் இளங்கலை பட்டமும், இளங்கலை பொறியியல் அல்லது இப்பணிக்கு நிகரான ப்ரோகிராமர், பைதாம், ஜாவா, ((Java, C++, VB.NET, Python, Java, jQuery, Java script good Knowledge) ->Familiarity with HTML, PHP, CSS, SQL, Python and JAVA) உள்ளிட்ட சாஃப்ட்வேர் ப்ரோகிராமிங் தெரிந்திருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர் பணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்:
Technical Officer: 40,000
Programmer:Rs.36,000
Technical Assistant: Rs.15,000
Lab Attender: Rs.10,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2022
அஞ்சல் முகவரி
RUSA Office,
Bharathiar University,
Coimbatore 641046
இ-மெயிலில் விண்ணப்பிக்க- rusa2.0bctrc@buc.edu.in
தொடர்புக்கு- +91-95971 74445.
விண்ணப்பத்தை பெற https://b-u.ac.in/recruitment-technical-officer-instrumentationtechnical-assistant-programmer-and-lab-assistant-0 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
கூடுதல் விவரங்களுக்கு. https://b-u.ac.in/ என்ற இணையதள முகவரியை தொடர்பு கொள்ளவும்.
மேலும் வாசிக்க..
Jobs Alert : SSC ஜூனியர் இன்ஜினீரியங் பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு; இதுதான் கடைசி தேதி..