முக வீக்கத்தை குறைக்க ஐஸ் ஃபேஷியல் உதவுமா? : டாக்டர் என்ன சொல்கிறார்?
தங்கள் தோல் பராமரிப்பு அன்றாடங்களின் ஒரு பகுதியாக, பலர் பல தோல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற ஃபேஸ் ஐசிங் முறையை பரிந்துரை செய்கிறார்கள்
தங்கள் தோல் பராமரிப்பு அன்றாடங்களின் ஒரு பகுதியாக, பலர் பல தோல் பிரச்சினைகளில் இருந்து நிவாரணம் பெற ஃபேஸ் ஐசிங் முறையை பரிந்துரை செய்கிறார்கள். குறிப்பாக கண்கள் பஃப் என வீக்கம் கொள்வதற்கு இதனை தீர்வாகச் சொல்கிறார்கள். ஆனால் குளிர் சிகிச்சை என்று அழைக்கப்படும் ஐஸ் ஃபேஷியல், நம்பப்படும் அளவுக்கு பயனுள்ளதாக உள்ளதா?
"சமூக ஊடகங்களில் இருப்பது போல் அதிசயமாக இல்லாவிட்டாலும், ஃபேஸ் ஐசிங் அதன் நன்மைகளைக் கொண்டுள்ளது" என்று தோல் மருத்துவரான டாக்டர் குர்வீன் வாராய்ச் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளுடன் பேஸ் ஐசிங் குறித்த சில நன்மைகளையும் பட்டியலிட்டுள்ளார்.
View this post on Instagram
1. வீக்கத்தைக் குறைக்கிறது: முகத்தின் நிணநீர் வடிகால்களை கட்டுப்படுத்த ஃபேஸ் ஐசிங் உதவுகிறது, இதையொட்டி, வீக்கத்தைக் குறைக்கிறது, குறிப்பாக கண் பகுதியின் கீழ் வீக்கம் குறையும் என அவர் பகிர்ந்து கொண்டார்.
2. நுண்துளை அளவு சுருங்குகிறது (தற்காலிகமாக...): "ஐசிங் வாசோகன்ஸ்டிரிக்ஷனை (இரத்த நாளங்களின் சுருக்கம்) ஏற்படுத்துவதால், ஐசிங் செய்த உடனேயே உங்கள் துளைகள் சிறியதாக இருக்கும்" என்று டாக்டர் குர்வீன் கூறுகிறார். இருப்பினும் இதன் விளைவு "மிகவும் தற்காலிகமானது" என்று கூறினார். அவ்வாறு செய்வது "மேக்கப்பைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு நல்ல ஹேக்" என்று அவர் மேலும் கூறுகிறார்.
View this post on Instagram
3. ரத்தக்கட்டு போன்றவற்றைக் குறைக்கிறது: இந்த மலிவான நுட்பம் ரத்தக்கட்டு போன்றவற்றைக் குறைக்கவும் உதவும் என்று அவர் மேலும் பகிர்ந்து கொண்டார்.
மேலும் இந்த ஐஸ் ஃபேசிங்கில் நேரடியாக ஐஸை முகத்தில் வைக்காமல் ஒரு துணியில் வைத்து அப்ளை செய்யும்படி அவர் பரிந்துரைக்கிறார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )