Food remedy: பாக்கெட் உணவுகளை ஓரங்கட்டுங்கள்! பதற்றத்தை குறைக்க இத்தனை இயற்கை உணவுகள் இருக்கு!
பதட்டம் அதிகரிக்கும் சூழலில், அந்த நொடியில் மட்டுப்படுத்த ஏதேனும் உதவுமா? வியப்பூட்டும் வகையில், சில உணவுகள் நமது பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது
இப்போதுள்ள சூழலில் மன நல பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. மன உளைச்சல் கிட்டத்தட்ட பலருக்கும் இருக்கிறது. அதன் விளைவாக குறையாத பதற்றம், நீண்ட நேர அவஸ்தையை வழங்குகிறது. இந்த மனப் பதட்டத்தைக் குறைக்க பல வழிமுறைகள் இருக்கின்றன. தியானம், வாழ்க்கை மாறுதல்கள், உணவு, சில நேரங்களில் மருந்துகள் என இதற்கான மருத்துவ வழிமுறை இருக்கிறது. ஆனால், பதட்டம் அதிகரிக்கும் சூழலில், அந்த நொடியில் மட்டுப்படுத்த ஏதேனும் உதவுமா? வியப்பூட்டும் வகையில், சில உணவுகள் நமது பதட்டத்தைக் குறைக்க உதவுகிறது. அந்த உணவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
பொதுவாக, பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவுகள் மனப் பதற்றத்திற்கு எந்த வகையிலும் உதவி செய்யாது. சமன் செய்யப்பட்ட, எல்லா சத்துகளும் கிடைக்கக்கூடிய உணவை எடுத்துக்கொள்வது பதட்டத்தை சமாளிக்க உதவும். பழங்கள் உண்பது, தண்ணீர் நிறைய குடிப்பது முதலிய பழக்கங்கள் மேலும் உதவும்.
செயற்கையான இனிப்புகள் கலந்த பானங்கள் மனஉளைச்சலை அதிகப்படுத்தும். அதனால், இளநீர், மோர் போன்ற பானங்களைப் பருகுவது நல்லது.
முக்கியமாக, கிரீன் டீ, மூலிகைத் தேநீர் போன்ற பானங்கள் மனதை அமைதிப்படுத்தும்.
ஆச்சரியமூட்டும் வகையில், மஞ்சளில் பொதிந்திருக்கும் குர்குமின் என்ற சத்து மூளையின் நலனுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதனால், இளஞ்சூட்டு பாலில் சிறிது மஞ்சள் தூளிட்டு, பனங்கற்கண்டு சேர்த்து குடிப்பது பதட்டத்தை வெகுவாகக் குறைக்கும்.
டார்க் சாக்லேட் வகைகள் மூளைக்கு ரத்த ஓட்டம் போய் சேர்வதை உறுதிபடுத்தும். மூளை ஆரோக்கியமாக இருக்கும்போது நம்மால் எளிதாக பதட்டத்தை மட்டுப்படுத்த முடியும். ஆகையால், டார்க் சாக்லேட் உண்பது நல்லது.
மேலும், பாதாம் போன்ற பருப்புகள், மற்ற விதைகள் போன்றவற்றை உண்ணலாம். இவற்றை சர்க்கரை சேர்த்த தயிருடன் உண்ணும்போது பதட்டத்தை நம்மால் சற்று எளிதாக சமாளிக்க முடியும்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )