Office Stretching : ஆபிஸில் ஒரே இடத்தில் பல மணிநேரம் உட்கார்ந்துக்கிட்டே இருக்கீங்களா? அப்போ இதைச் செய்யுங்க!
ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மேசையில் அமர்ந்திருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 20 சதவிகிதம் அதிகரிக்கிறது
அலுவலகத்தில் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் திரையை குனிந்து பார்த்துக் கொண்டிருப்பது சோர்வு, நீரிழிவு நோய், கவலை மற்றும் இருதய நோய்கள் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். சைனீஸ் அகாடமி ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் நடத்திய ஆய்வின்படி, ஒவ்வொரு நாளும் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக மேசையில் அமர்ந்திருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 20 சதவிகிதம் அதிகரிக்கிறது. இருப்பினும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது இதய செயலிழப்பு அபாயத்தை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
சைமன் ஃப்ரேசர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு மற்றும் சுகாதார அறிவியல் இணை பேராசிரியரான ஸ்காட் லியர், "நீங்கள் உட்கார வேண்டும் என்றால், நாளின் மற்ற நேரங்களில் அதிக உடற்பயிற்சி செய்வது அந்த ஆபத்தை ஈடுசெய்யும்" என்று கூறுகிறார்.
த்ரைவ் குளோபல் என்னும் ஆய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, "நமது அன்றாடங்களில் ஸ்ட்ரெட்ச் செய்வதை வாடிக்கையாக்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஸ்ட்ரெச் செய்வதைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
View this post on Instagram
நீண்ட நேரம் வேலையில் அமர்ந்திருப்பது போலத் தோன்றினால்
1. முதலில், கழுத்தை நன்றாகச் சுழற்றவும் இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
2. அதன் பிறகு, தோள்பட்டை சுழற்சிகள் மற்றும் தோள்பட்டையை குலுக்குதல் போன்ற அசைவுகளை மேற்கொள்ளவும்.
3. அடுத்து, உங்கள் மணிக்கட்டுகளை மெதுவாகவும் மென்மையாகவும், கடிகார திசையிலும், பின்னர் எதிர் கடிகார திசையிலும் சுழற்றவும். இப்போது உங்கள் மணிக்கட்டை நீட்ட மற்றொரு கையைப் பயன்படுத்தவும். சிறிது நேரம் அந்த நிலையில் வைத்திருங்கள். நீண்ட வேலை நேரத்தால் உங்கள் கைகளில் ஏற்படும் அழுத்தத்தை இது இலகுவாக்கும்.
4. முதுகெலும்பு ஸ்ட்ரெச் உடல் முழுவதும் புத்துணர்ச்சி மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும்.
5. கூடுதலாக, உங்கள் கால்களை தரையில் இணையாக வைத்து, பின்னர் நீட்டுவதற்காக அவற்றை உயர்த்தவும்.
6. மற்றபடி யோகாசனங்களான பிறைநிலவு போஸ், நாற்காலி புறா போஸ், மேசை பலகை போஸ் போன்றவற்றை செய்ய முயற்சிக்கவும்.
கவனமிருக்கட்டும்... உடல் ஆரோக்கியமே பிரதானம்!
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )