Karthigai Deepam: ரஜினி பட பாணியில் நடந்த கலாட்டா.. கார்த்திகை தீபத்தில் கலகலப்பும், விறுப்பும்!
Karthigai Deepam: கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியல் இன்று முதல் ஒரு மணி நேர எபிசோடாக ஒளிபரப்பாக உள்ள நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
ரேவதியை காப்பாற்றிய கார்த்திக்:
அதாவது ரேவதியை கடத்திய முத்துப்பாண்டியின் ஆட்கள் அவளைச் சொக்கப்பனைக்குள் மறைத்து வைக்க கார்த்திக் ரேவதியை எல்லா இடமும் தேடி கடைசி நொடியில் சொக்கப்பானைக்குள் கட்டி போடப்பட்ட ரேவதியின் உயிரை காப்பாற்றுகிறான்.
ரேவதியை கடத்திய முத்துப்பாண்டியை ஊராட்கள் அடிக்கப் போக கார்த்திக் வேண்டாம் என்று சொல்லி தடுத்து முத்துப்பாண்டியின் மனைவிக்காக மன்னித்து விடுகிறான். பிறகு கார்த்திக், ரேவதி அங்கிருந்து வீட்டிற்கு கிளம்புகின்றனர்.
கோபத்தில் சாமுண்டீஸ்வரி:
ரேவதி கடத்தப்பட்ட விஷயம் அறிந்த சாமுண்டீஸ்வரி கார்த்திக் வந்ததும், அவள் எதற்கு வெளியே கூட்டிட்டு போன என்று சத்தம் போடுகிறாள். கார்த்திக் இன்னமும் நாங்க சட்டபூர்வமா புருஷன் பொண்டாட்டி தான் நாங்க சேர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்லி தான், நீதிமன்றம் உத்தரவு போட்டதுக்கு என்று பதிலடி கொடுக்க சாமுண்டீஸ்வரி கோபமடைகிறாள்.
இதைத்தொடர்ந்து சாமுண்டீஸ்வரி எல்லோருக்கும் பொங்கலுக்காக துணி எடுத்துக் கொடுக்க கார்த்திக் மட்டும் கொடுக்காமல் விடுகிறாள். அதன் பிறகு சாமுண்டீஸ்வரி பார்க்க வந்த அமைச்சர் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் துணிமணிகளை கொடுத்து, சாமுண்டீஸ்வரி கையால் கொடுக்க சொல்ல வேறு வழியில்லாமல் கார்த்திக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. பிறகு கார்த்தியின் ஏற்பாட்டால் தான் அமைச்சர் இங்கு வந்தார் என்பது தெரிய வருகிறது.
பொங்கல் பரிசு:
அதன் பிறகு ரேவதி கார்த்திக்கு பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டு ஒரு கடிதத்தில் இரவு 10 மணிக்கு தோட்டத்திற்கு வரவும் பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று எழுதி முத்து பட பாணியில் அதை தூக்கி வீச அந்த கடிதம் ஒவ்வொருத்தர் கைக்கும் கை மாறுகிறது. கடைசியில் சந்திரகலாவும் இந்த லெட்டரை படித்து கார்த்திக் ரேவதி சந்திப்பதற்காக போடப்பட்ட திட்டம் என அறிந்து கொள்கிறாள்.
உடனே சாமுண்டீஸ்வரிக்கு விஷயத்தை தெரியப்படுத்தி இதை எப்படியாவது தடுக்கணும் என ஏற்றி விடுகிறாள். இரவு 10 மணிக்கு மேல் எல்லோரும் தோட்டத்தில் கூட ரேவதி கார்த்திக்கு பொங்கல் பரிசு கொடுக்க போக, அங்கு வந்த சந்திரகலா அதை பறித்து தூக்கி வீசி உடைத்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.





















