மேலும் அறிய
Advertisement
Anna Serial: சௌந்தரபாண்டியிடம் கோர்த்து விட்ட ஷண்முகம்.. அண்ணா சீரியலில் அடுத்து நடக்க போவது என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்டை கீழே காணலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் சௌந்தரபாண்டியை பார்க்க கிளம்ப இங்கே முத்துப்பாண்டி ரத்னா மற்றும் வெங்கடேஷ் இருக்கும் இடத்துக்கு வந்து அதிர்ச்சி கொடுத்தான்.
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் பிளாஷ் கட்டில் ரத்னா வெங்கடேஷ் பேசி கொண்டிருப்பதை பார்த்த ஒருவர் முத்துபாண்டிக்கு தகவல் கொடுக்க அவன் வேகமாக கிளம்பி வருகிறான், இங்கே வந்த முத்துபாண்டியை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைய அவன் நல்லவன் போல பேசி நடிக்கிறான். அதாவது அவன் மேல எந்த தப்பும் இல்ல, நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போச்சு, அவனுக்குள்ளவும் ஆசை இருந்திருக்கும்ல என்று பேச ரத்னா இதை கேட்டு ஆச்சரியமடைகிறாள்.
மேலும் உன்னையும் நான் சின்ன வயசுல இருந்து பார்க்கிறேன், உன்னை பத்தி எனக்கு தெரியாதா? என்று சொல்லி விட்டு இனிமே ரத்னா வாழ்க்கையில் நீ வர கூடாது என்று வெங்கடேஷிடம் சொல்லி விட்டு அங்கியிருந்து ரத்னாவை அழைத்து கொண்டு கிளம்புகிறான். பிறகு ரத்னா உங்களை பார்த்ததும் நான் ஷாக் ஆகிட்டேன், ஆனால் நீங்க இப்படி ஜெனீவ்வா நடந்துபீங்கனு எதிர்பார்கல என்று நன்றி சொல்கிறாள்.
மறுபக்கம் பரணி கல்யாண கோலத்தில் தயாராகி அம்மாவுக்கு வீடியோ கால் செய்து பேச பாக்கியம் நீ கல்யாணம் பண்ணிட்டு எதோ ஒரு மூலையில் சந்தோசமாக வாழ்ந்தா போதும் என கண் கலங்கி ஆசிர்வாதம் செய்கிறாள். பின்னர் சௌந்தரபாண்டி கட்டட வேலை நடக்கும் இடத்தில இருக்க ஷண்முகம் அங்கு வருகிறான், அப்போது உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும் என்று பரணிக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை என்று சொல்ல அவளுக்கு இருந்தா என்ன இல்லனா என்ன அவளுடைய தலை எழுத்து இது தான் என்று சௌந்தரபாண்டி கோபப்படுகிறார்.
மேலும் அவ ஒரு டாக்டரை விரும்புறா என்று ஷண்முகம் சொல்ல அவளுக்கு அந்த பாத்திரக்கடை காரன் கூட தான் கல்யாணம் நடக்கும் என்று சௌந்தரபாண்டி சொல்ல இல்ல அவங்க கல்யாணம் பணிக்க போறாங்க என்று சொல்ல சௌந்தரபாண்டி அதிர்ச்சியாகி அங்கிருந்து கிளம்பி வரும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion