Madan Gowri | முதல்ல நண்பர்கள்.. அப்புறம் காதல்.. ப்ரேக்-அப்.. கல்யாண சேதி சொன்ன மதன் கெளரி...
யூட்யூபர் மதன் கௌரிக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கவிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஏகப்பட்ட யூட்யூப் சேனல்கள் இருக்கின்றன. இருந்தாலும் சில சேனல்கள் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளன. அப்படிப்பட்ட சேனல்களில் ஒன்று மதன் கௌரி. மதன் கௌரி என்பவர் நடத்தி வரும் இந்த சேனல் அவர் காதல் தோல்வியில் இருந்தபோது உருவாக்கப்பட்டது.
சேனல் எவ்வளவு பிரபலமாக இருக்கிறதோ அதே அளவு விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், மதன் கௌரி தனது திருமண செய்தியை தன் யூட்யூப் சேனலிலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “எனது திருமண செய்தியை வீட்டில் தெரிவிக்கும்போது எப்படி பதற்றமாக இருந்ததோ அதேபோல்தான் இப்போதும் இருக்கிறது. மதுரையில் நான் படிக்கும்போது நித்யா என்ற பெண் குறித்து என் நண்பர்கள் கூறுவார்கள். அதனையடுத்து சமூக வலைதளத்தில் பழக்கமானோம்.
ரயில் நிலையத்தில் முதல் முறையாக பார்த்தபோது இரண்டு பேருக்கும் பேச இரண்டு நொடிகள் மட்டுமே பேச நேர கிடைத்தது. அதன் பிறகு தொடர்ந்து பழகினோம்” என்றார்.
View this post on Instagram
மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சமூக வலைதளங்களில் பழகி காதலர்களாகி பிரிந்துவிட்டு மீண்டும் சேர்ந்திருக்கிறோம். இது தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றன. இந்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ள போகிறோம்” என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்