Arabic Kuthu: தொடரும் சாதனை... யூடியூபின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ‘அரபிக்குத்து’ பாடல்!
ஜானி மாஸ்டர் நடனமைத்த அரபிக்குத்து பாடல் வீடியோ ஒருபுறமும், படம் வெளியாவதற்கு முன்பாகவே வெளியான லிரிக்கல் வீடியோவும் தொடர்ந்து யூடியூபில் ஹிட் அடித்து வருகின்றன.
![Arabic Kuthu: தொடரும் சாதனை... யூடியூபின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ‘அரபிக்குத்து’ பாடல்! Youtube India trends 2022 Arabic kuthu song top charts Arabic Kuthu: தொடரும் சாதனை... யூடியூபின் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்த ‘அரபிக்குத்து’ பாடல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/08/1d52250ad9ef88058e403d13aeecaaad1670474577651574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
யூடியூப் தளம் ஆண்டு தோறும் வெளியிடும் டாப் 10 வீடியோக்கள் பட்டியலில் ’அரபிக்குத்து’ பாடல் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ;பீஸ்ட்’ படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியானது.
படம் வெளியாவதற்கு முன்பாகவே இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் அதிரிபுதிரி ஹிட் அடித்தன. குறிப்பாக அனிருத் இசையமைத்து ஜொனிடா காந்தியுடன் இணைந்து பாடிய 'அரபிக்குத்து' பாடலின் லிரிக்கல் வீடியோ பெரும் ஹிட் அடித்து, இன்ஸ்டா ரீல்களை ஆக்கிரமித்தது.
ஆனால், படம் வெளியாகி விஜய் ரசிகர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியதோடு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களையும் பெற்றது. எனினும் படத்தின் மிகப்பெரும் ஆறுதலாக இசை, பாடல்கள் அமைந்த நிலையில், ’அரபிக்குத்து’ பாடல் தொடர்ந்து இணையத்தில் சாதனைகளைப் புரிந்து வந்தது.
View this post on Instagram
ஜானி மாஸ்டர் நடனமைத்த அரபிக்குத்து பாடல் வீடியோ ஒருபுறமும், படம் வெளியாவதற்கு முன்பாகவே வெளியான லிரிக்கல் வீடியோவும் தொடர்ந்து யூடியூபில் ஹிட் அடித்து வருகின்றன.
அந்த வகையில் தற்போது யூடியூப் தளம் வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் டாப் 10 பாடல்கள் பட்டியலில் 4ஆவது இடம்பிடித்து ’அரபிக்குத்து’ பாடல் மற்றொரு சாதனை படைத்துள்ளது.
அதேபோல் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இந்த ஆண்டு பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ’புஷ்பா’ படத்தின் மூன்று பாடல்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
சித் ஸ்ரீராம் குரலில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த ’ஸ்ரீவள்ளி’ பாடல் முதலிடமும், ‘சாமி..’ பாடல் மூன்றாவது இடமும், ’ஊ அண்டாவா மாமா...’ பாடல் 7ஆவது இடமும் பிடித்துள்ளன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)