நடன இயக்குநர் பிரபு ஶ்ரீனிவாஸ் இயக்கியுள்ள அக்யூஸ்ட் படம் எப்டி இருக்கு...விமர்சனம் இதோ
Accused Movie Review : பிரபல நடன இயக்குநர் பிரபு ஶ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள அக்யூஸ்ட் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

அக்யூஸ்ட்
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்யூஸ்ட்' திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். ஆக்ஷன்-ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் - சச்சின் சினிமாஸ்- ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் உதயா - 'தயா' என். பன்னீர்செல்வம் - எம். தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்யூஸ்ட் திரைப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
அக்யூஸ்ட் திரைப்பட விமர்சனம்
பிரபல அரசியல் கட்சியிந் செயலாளரை கொலை செய்துவிட்டு சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார் ரவுடி உதயா. நீதிமன்ற விசாரணைக்காக உதயாவை சென்னையில் இருந்து சேலத்திற்கு அழைத்துச் செல்கிறார் கான்ஸ்டபிள் அஜ்மல். செல்லும் வழியில் உதயாவை கொலை செய்ய ரவுடி கும்பல் ஒன்று முயற்சி செய்கிறது. உதயாவை இந்த ரவுடி கும்பல் ஏன் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவரை இந்த கும்பலிடம் இருந்து காப்பாற்றி அஜ்மல் நீதிமன்றம் அழைத்து செல்கிறாரா எனபதே அக்யூஸ்ட் படத்தின் கதை
படம் தொடங்குவதே விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சியில் தான். இந்த காட்சி இந்த படத்திற்கான ஒட்டுமொத்த மூடை செட் செய்து பார்வையாளர்களை படத்தில் ஒன்ற வைக்கிறது. சென்னையில் தொடங்கும் கதை இருந்து சேலம் நீதிமன்றம் சென்று சேர்வதில் முடிகிறது படம். இதனிடையில் காமெடி , ஆக்ஷன் , காதல் என என கமர்சியல் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்க்குநர் உதயாவின் கடந்த காலம் , அவரது காதல் வாழ்க்கை , எதனால் அவர் இந்த கொலையை செய்தார் போன்ற காட்சிகள் சொல்லப்பட்டுகின்றன. அவரை ரவுடி கும்பலிடம் இருந்து காப்பாற்றும் சண்டைக் காட்சிகளில் அஜ்மல் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் உதயாவைக் காட்டிலும் அஜ்மலுக்கு நடிப்பதற்கான குறைவாக சாத்தியங்களே இப்படத்தில் உள்ளன. யோகி பாபுவின் காமெடிகள் பெரிதாக வர்க் அவுட் ஆவதில்லை. கதாநாயகி ஜான்விகா உணர்ச்சிகரமான காட்சிகளில் ஜொலிக்கிறார். அங்கங்கு சில திருப்பங்களுடனும் நிறைய ஆக்ஷன் காட்சிகளுடனும் செல்லும் அக்யூஸ்ட் காதல் காட்சிகளில் கொஞ்சம் போர் அடிக்கிறது. படத்தின் ஐடியா சுவாஸ்யமானது என்றாலும் காட்சிகளிலும் கதை சொன்ன விதத்திலும் தனித்துவமாக குறிப்பிட்டு சொல்வதற்கு இல்லை என்பதே படத்தின் மைனஸ்.





















