Winner Movie: ‛அது போன மாசம்...’ மாதிரி தெரியுது... ஆனால் 19ம் ஆண்டில் வின்னர்!
"இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்றாங்கைய்யா..." எனும் வின்னர் படத்தின் டயலாக் இன்றும் பலரின் ஃபேவரட். இப்படி அந்த படத்தில் பல டயலாக்குகள் இன்றும் ட்ரெண்டிங்.
சுந்தர். சி எழுதி இயக்கிய ஒரு காதல் கலந்த நகைச்சுவை திரைப்படம் "வின்னர்". இப்படம் வெளியாகி இன்றோடு 19 ஆண்டுகளை நிறைவு செய்தும் இந்த தருணத்தில் அப்படம் பற்றிய சில ஸ்வாரஸ்யமான தகவல்கள் இதோ உங்களுக்காக.
படத்தின் ஹைலைட் :
சுதன் S ராமச்சந்திரன் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் ஹீரோவாக பிரஷாந்த் நடிக்க அவருக்கு ஜோடியாக கிரண் நடித்திருந்தார். இவர்களுடன் வைகை புயல் வடிவேலு, எம்.என். நம்பியார், விஜயகுமார், ரியாஸ் கான், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திரைப்படம். கட்டதுரை கதாபாத்திரமாக அவர் இப்படத்தில் செய்த காமெடி இன்றும் மீம்ஸ்களாக பயன்படுகிறது. பூபதி பாண்டியனின் வசனங்கள் படத்திற்கு மிக பெரிய ஹைலைட்டாக அமைந்தது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
கைப்புள்ள ஆர்மி:
இது ஒரு காதல் திரைப்படமாக இருப்பினும் இப்படம் முழுவதும் பயணிக்கும் ஒரு நகைச்சுவை கதாபாத்திரம் கைப்புள்ள. வடிவேலுவை மனதில் வைத்தே இந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டதாம். படம் வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவடைந்ததும் இன்றும் வடிவேலுவின் இந்த கதாபாத்திரத்தின் பெயர் மிகவும் பிரபலம்.
ஹீரோவாக நடித்த பிரஷாந்த் திரைவாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கியமான திரைப்படமாகும். பிரஷாந்த் - வடிவேலு காம்பினேஷன் அருமையா ஒர்க் அவுட் ஆனது. "இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்றாங்கைய்யா..." எனும் டயலாக் பலரின் ஃபேவரட். இப்படி அந்த படத்தில் பல டயலாக்குகள் இன்றும் ட்ரெண்டிங்.
View this post on Instagram
ஆன் ஸ்பாட் டயலாக்:
இப்படத்தின் பல வசனங்கள் வடிவேலு ஸ்பாட்ல சொன்ன வசனங்கள். அவர் ஒரு வேலையில் மும்மரமாக இறங்கி விட்டால் அதில் நூறு சதவீகிதம் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவார் . மேலும் ஸ்வாரஸ்யம் என்னவென்றால் அந்த படத்தில் அவர் கால்களை சற்று வளைத்து நடப்பது போல இருக்கும். அந்த படப்பிடிப்பின் சமயத்தில் அவருக்கு நிஜமாகவே காலில் அடிபட்டு இருந்தது. அதனால் சற்று தாங்கி தாங்கி நடப்பார். அது அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கவே அப்படியே படத்தில் நடித்தும் விட்டாராம் வடிவேலு. அது தான் ஒரு உண்மையான கலைஞனின் ஈடுபாடு.
இப்படத்தின் ஷூட்டிங் மிகவும் மும்மரமாக நடைபெற்றது ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் வரை படம் தாமதமானது ஆனால் அதற்கு பின்னர் படப்பிடிப்பை முடித்து படம் வெளியான பிறகு பட்ட துன்பங்கள் எல்லாம் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் விமர்சனங்களால் பறந்து போனது.
நல்ல ரெஸ்பான்ஸ்:
வின்னர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கியமான முதல் காரணம் வடிவேலு மற்றும் அவர் பேசும் வானங்கள் தான். பெரும்பாலான வசனங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளை கடந்தாலும் இன்றும் அந்த கதாபாத்திரங்கள் மனதில் நிலைப்பது தான் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.