“எல்லாத்தையும் சொன்னேன்” - ஷாருக்கானை இறுக கட்டியணைத்து அன்பை பொழிந்த டிடி!
டிடி என்றால் விஜய் டிவியும், அவரது காஃபி வித் டிடி ஷோவும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஒரே ஷோ மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாடையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் டிடி.

டிடி என்றால் விஜய் டிவியும், அவரது காஃபி வித் டிடி ஷோவும் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு ஒரே ஷோ மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாடையும் திரும்பிப் பார்க்கவைத்தவர் டிடி. தொகுப்பாளினிகளுக்கு ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிக் கொடுத்தவர். இப்படி சொல்லிக் கொண்டே செல்லலாம்.
அப்படிப்பட்ட டிடி அண்மையில் நடிகர் ஷாருக்கானை சந்தித்தார். நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தின்போதுதான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அது குறித்து டிடி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இரண்டு படங்களை அவர் பகிர்ந்துள்ளார். ஒன்றில் அவர் ஷாருக்கானை அன்புடன் கட்டியணைத்துள்ளார். மற்றொன்றில் இருவரும் இணைந்து போஸ் கொடுத்துள்ளனர்.
திவ்யதர்ஷினி இந்த சந்திப்பு குறித்து, நான் அவரை அத்தனை இறுக்கமாக கட்டியணைத்துக் கொண்டேன். இத்தனை ஆண்டுகளில் என்றாவது ஒரு நாள் ஷாருக்கானை சந்தித்தால் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ அத்தனையையும் நான் சொன்னேன். பல ஆண்டுகளாக நீங்கள் எங்களை மகிழ்வித்துள்ளீர்கள் சார். அதனால் நீங்கள் தி பெஸ்ட் என்னவோ அதை மட்டுமே வாழ்க்கையில் பெறுவீர்கள் சார். உங்களின் மகிழ்ச்சிக்காக நான் அன்றாடம் இறைவனை வேண்டிக் கொள்வேன். சினிமா துறையில் நம் கிங் கான் 30 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில் இந்தப் புகைப்படத்தைப் பகிர்வது சரியானதாக இருக்கும் அல்லவா? உங்களைப் போல் யாரும் இதற்கு முன்னர் இருந்திருக்கவும் முடியாது. இனியும் இருக்க இயலாது. அட்லீக்கு மிகுந்த நன்றி. ஜவான் திரைப்பட ரூ.1000 கோடி வசூல் செய்து மெகா ப்ளாக்பஸ்டர் ஆக வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். இவ்வாறாக டிடி, ஷாருக்கானுடனான தனது சந்திப்பை சிலாகித்துக் கூறியுள்ளார்.
What a better day to post this pic as our king khan celebrates 30 years in this industry @iamsrk sir no on like you ever before and ever after ❤️
— DD Neelakandan (@DhivyaDharshini) June 27, 2022
Thank you sooooo much @Atlee_dir darling, for this kindness I wish u a mega blockbuster hit #Jawan 1000crores vasool 😉🤗😘❤️ https://t.co/cyCzPP8Ua7
இதற்கிடையில் ஷாருக்கானும் தனது இன்ஸ்டா பக்கத்தில், சினிமாவில் எனது 30 ஆண்டுகால பயணத்தை கொண்டாடி எனக்காக கேக்குகளையும், இணையத்தில் பல வீடியோக்களையும் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி. இதை சிறப்பாகக் கொண்டாட ஒரே வழிதான் இருக்கிறது. இன்னும் கடினமாக உழைத்து உங்கள் அனைவரையும் ரசிக்கவைக்க வேண்டும். அனைவருக்கும் எனது அன்பை உரித்தாக்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

