பிரேக் அப் ஆனா என்ன...கவலையேதும் இல்லை...சாகசங்கள் செய்யும் விஷாலின் முன்னாள் காதலி அனிஷா
Anisha Alla Reddy : நடிகர் விஷாலை திருமணம் செய்துகொள்ள இருந்த அனிஷா அல்லா ரெட்டி இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா

நடிகர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகாவுக்கு அண்மையில் திருமணம் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நடிகர் சங்க கட்டிட பணிகள் முடிவடைந்ததும் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இப்படியான நிலையில் விஷாலின் முன்னாள் காதலியான அனிஷா அல்லா ரெட்டி பற்றி பலரும் சமூக வலைதளங்களில் பேசி வருகிறார்கள்.
விஷாலின் முன்னாள் காதலி அனிஷா அல்லா ரெட்டி
நடிகர் விஷாலும் அனிஷா அல்லா ரெட்டியும் காதலித்து வந்தனர். அனிஷா ஒரு முன்னாள் பாஸ்கெட் பால் ப்ளேயர். தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி , பெல்லி சூப்பிலு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இருவருக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் இருவரும் திருமணம் நடைபெற இருந்தது. இப்படியான நிலையில் அனிஷா விஷாலுடனான புகைப்படங்களை நீக்கினார். அக்டோபர் மாதம் திருமணம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பின் விஷால் அனிஷா பிரேக் செய்தனர். அனிஷாவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இப்போது என்ன செய்கிறார் அனிஷா
அனிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார். பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வது , ஆழ்கடல் நீச்சல் , வெவ்வேறு இசை வாத்தியங்களை வாசிப்பது என தனிப்பட்ட வாழ்க்கையில் உற்சாகமாக இருந்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோக்களையும் அப்லோட் செய்கிறார்.
விஷால் 35
விஷால் நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி மற்றும் மதகஜராஜா ஆகிய இரு படங்களும் வசூல் ரீதியான வெற்றிபெற்றன. விஷாலின் 35 ஆவது படத்தை ரவி அரசு இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு மகுடம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.செளத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். துஷாரா விஜயன் , அஞ்சலி ஆகிய இரு நடிகைகள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
Here we go. It’s time to reveal the TITLE of my next film. Presenting to all you darlings all over the world The official #TitleTeaser of #Vishal35 & #SGF99 hope u all enjoy it. God bless#MAGUDAM #மகுடம் ⚓🔥💥
— Vishal (@VishalKOfficial) August 24, 2025
Tamil ▶️ https://t.co/codtWlLuv8
A @gvprakash Musical! 🎼… pic.twitter.com/CMPCxfM0lS





















