மேலும் அறிய

”நாக்கு முக்கா” பாடலுக்கு நடனமாடிய ஜான்வி கபூர் ! : கீர்த்தி சுரேஷும், தெறி கமெண்ட்ஸும்..!

முன்னதாக இதே கேங்குடன் , சீன் பால் (sean paul) என்ற ராப்பர் ஒருவரின் இணைய வைரல் பாடலுக்கு நடனமாடி , அதையும் தனது ரீல்ஸ் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் ஜான்வி.

பி.வி.பிரசாத் இயக்கத்தில் நகுல் நடிப்பில் கடந்த 2008 ஆம் வெளியான திரைப்படம்தான் ‘காதலில் விழுந்தேன்’ இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாக்கு முக்கா’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலம். இன்றளவும் கூட இந்த பாடலை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. விஜய் ஆண்டனி  இசையில் உருவான இந்த பாடலை 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மைதானத்திலும் கூட ஒலிபரப்பு செய்யப்பட்டது. துள்ளல் இசை போட வைக்கும் இந்த பாட்டிற்கு , நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தனது நண்பர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளார்.  இது தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவேற்றியுள்ள இந்த  நடனத்திற்கு ”அக்ஸா கேங் திரும்பிவிட்டது. எங்களுக்கு எந்த நடனப் பொருட்களும் தேவையில்லை, மேடையும் தேவையில்லை இருந்தாலும் குறைந்த பட்ஜெட்டில் தொடர்ந்து நாங்கள் கலக்குவோம்” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

இந்த வீடியோவை கண்ட பலரும் ஜான்வியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். கீர்த்தி சுரேஷ், அர்ஜூன் கபூர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட நடிகர்களும் ஜான்வியின் நாக்கு முக்கா வீடியோவிற்கு கீழே தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். முன்னதாக இதே கேங்குடன் , சீன் பால் (sean paul) என்ற ராப்பர் ஒருவரின் இணைய வைரல் பாடலுக்கு நடனமாடி , அதையும் தனது ரீல்ஸ் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் ஜான்வி.

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

ஜான்வி கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திவரும் ஜான்வி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் “ரோஹி” . இந்த திரைப்படம் ஹாரர் ஜானரில் பிரபல ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்திய ஜான்விக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். சமூக வலைத்தளங்களில் மிகவு ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வபோது தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அப்படி சமீபத்தில் இவர் வெளியிட்ட கிளாமர் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலானது.

View this post on Instagram
 
A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

 உடற்பயிற்சி, யோகா போன்ற ஃபிட்னஸ் ஆக்டிவிட்டிஸிலும் ஆர்வமாக உள்ளவர் ஜான்வி. ஆரம்ப காலக்கட்டத்தில் பப்ளி கேர்ளாக அறியப்பட்ட ஜான்வி இன்று உடல் எடையை ஆச்சர்யப்படும் அளவிற்கு குறைத்துள்ளார். பெல்லி டான்ஸ், பேட்மிட்டன் போன்ற உடல் எடையை குறைக்க உதவும் செயல்பாடுகளிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். இவரது தந்தை போனி கபூர்தான் அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். அஜித்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றி #வலிமை என்பதற்கு பதிலாக #வலமை என பதிவேற்றி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் என்பது நினைவுகூறத்தக்கது.

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Upcoming Hybrid SUVs: அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
அடேங்கப்பா.! 1000 கிமீ வரை மைலேஜா.?! இந்தியாவில் வரவிருக்கும் 4 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி-க்கள்; முழு விவரம்
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
Embed widget