மேலும் அறிய

Vishal32 | தயாராகுங்கள் விஷால் ஃபேன்ஸ்! - இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாகுது!

விஷாலின் 31 வது படமான வீரமே வாகை சூடும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகருள் ஒருவராக இருக்கும் விஷால் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி முழு மூச்சில் நடித்து வருகிறார். ஆர்யா- விஷால் கூட்டணியில் உருவாகியுள்ள எனிமி படத்தின் அப்டேட் சமீபத்தில் வெளியானது அதன்படி படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று ,அண்ணாத்த , மாநாடு உள்ளிட்ட பல  முன்னணி நடிகர்களின் படங்களுடன் தீபாவளி ரேஸில் கலந்துக்கொள்ளவுள்ளது என்பதை நாம் பார்த்தோம். இந்நிலையில் விஷாலின் 31 வது படமான வீரமே வாகை சூடும் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. படத்தை து.ப.சரவணன் இயக்க , விஷாலே படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் படத்தின்  டீஸ்ர் மற்றும் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஷால் நடிக்கும் அவரது 32 வது படத்தை அறிமுக இயக்குநர் வினோத் இயக்கவுள்ளார்.அது குறித்த அறிவிப்பை முன்னதாகவே பார்த்தோம். இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி சரியாக இன்று (செப்டம்பர் 17) மாலை 5 மணிக்கு விஷாலின் 32 வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இந்த படத்தை ராணா புரடெக்‌ஷன் தயாரிக்கவுள்ளது. படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடிக்கவுள்ளார். மேலும் நந்தா, பிரபு உள்ளிட்ட நடிகர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.


அதே போல விஷால் தனது 33 மற்றும் 34 வது படத்திலும் ஒப்பந்தமாகிவிட்டார். 33 வது படத்தை அறிமுக இயக்குநருக்கே கொடுக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் , திரிஷா இல்லைனா நயன்தாரா, பாகிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது.படத்தை வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸுக்கு பிறகு , சிறிது கால இடைவெளியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே போல விஷாலின் 34 வது படத்தை பிரபல இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவி நடித்த ’அடங்கமறு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?
Karthigai Deepam: ஸ்பாட்டிலே பறிபோன அருண் உயிர்! கதறி அழுத கார்த்திக்! சாமுண்டீஸ்வரி கதி இனி என்ன?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
OTT Release: சிக்மா முதல் பத்தா வரை... தியேட்டரில் மிஸ் பண்ணிட்டீங்களா? நாளை OTT-யில் ரிலீஸ்! எதுல எந்த படம்?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
தீபாவளி டிவி ஸ்பெஷல்: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழில் வெளியாகும் படங்கள் என்னென்ன?
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!
‘லவ் 3. ஓ’ மோஷன் போஸ்டர் வெளியீடு.. வாய்ப்பு தராதவர்களுக்கு நன்றி: ஆர்னிகா உருக்கம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Stalin:: ”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
”எந்த ஜோசியர் சொன்னார், அதென்ன 9 நிமிட கணக்கு” ஸ்டாலின் வீடியோவிற்கு தவெக பதிலடி
Congress Rally: ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
ரூ.12 ஆயிரம் கோடி நஷ்டமாகும்..! உங்க மகனை தடுத்து நிறுத்துங்க - சோனியாவிற்கு வர்த்தகர்கள் கடிதம்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
அன்பில் மகேஷ் கைது.. கே.என்.நேரு வீட்டில் ரெய்டு! அடுத்தது நம்மளா? கதிகலங்கும் முன்னாள் அமைச்சர்கள்
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
இன்று விண்ணில் பாய்கிறது GSLV - F18 : இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவும் NVS-03 செயற்கைக்கோள் பற்றி தெரியுமா?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
உலகையே உற்றுநோக்க வைக்கும் இஸ்ரேல் தேர்தல் முடிவுகள்! - மீண்டும் பிரதமராவாரா நெதன்யாகு?
Tasmac: டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..! நவ.1 முதல் உயரும் சரக்கு பாட்டில் விலை - எந்த கடையிலும் ரூ.10 கிடைக்கும்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
தமிழ்நாட்டில் இன்றைய வானிலை என்ன? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் வெயில் வாட்டுமா?
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
வானூர் அருகே காதலை கைவிட மறுத்த 14 வயது மகள் - கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை!
Embed widget