Viruman: விருமன் மீட்ட விருட்சம் யுவன்... ‛எங்கேயா இருந்த இத்தனை நாளா...’
விருமனில், ஆடியோ ட்ராக்கில் இல்லாத இருபாடல்கள் படத்தில் உள்ளது. ஒன்று இளையராஜா பாடும் டைட்டில் சாங். மற்றொன்று எண்ட் கார்டில் யுவன் பாடும் மற்றொரு பாடல். இந்த இரண்டுமே, கேட்க அவ்வளவு இனிமை.
கூச்சல், குழப்பத்திற்கு மத்தியில் இது கவனிக்கப்படாமல் போயிருக்கலாம். அல்லது, கேட்காமல் போயிருக்கலாம். உண்மையில், அந்த மேஜிக் நீண்ட ஆண்டுகளுக்குப் பின் நடந்திருக்கிறது. ஆம்... யுவன்சங்கர் ராஜாவின் மேஜிக் பின்னணி விருமனில் விளையாடியிருக்கிறது.
வெறும் 3 பாடல்களை வைத்து இசையமைப்பாளரை கணித்துவிட முடியாது. விருமன் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பேசப்பட்டு வருகிறது. அதனால், அது படத்தில் எதிரொலிப்பதில் பெரிய விசயமல்ல. உண்மையில், கவனிக்க வேண்டியது, யுவனின் பின்னணி தான். ‛ப்ரேம் ஃபை ப்ரேம்’ யுவனின் பின்னணி விருமனை வேறு லெவலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
View this post on Instagram
ஆடியோ வெளியீட்டு விழாவில், விருமன் இயக்குனர் முத்தையா பேசியது கவனிக்க வேண்டிய ஒன்று. ‛எனது முதல் படமான குட்டிப்புலியில், கொம்பனில்... என தொடர்ந்து யுவன் சாரை இசையமைக்க முயற்சித்தேன். ஆனால், அது முடியாமல் போனது. விருமன் கதை சொன்னதும், கார்த்திக் சாரிடம் ஒன்று தான் கேட்டேன்... சார் யுவன் சார் வேண்டும் என்று,’ என, கூறினார்.
இதை கேட்ட பலருக்கு ஒரு விசயம் தோன்றியிருக்கும், ‛பெட்ரமாஸ் லைட்டே தான் வேண்டுமா...’ என்பது தான், அது. ஆனால், முத்தையா ஏன் யுவனை தேடினார், என்பதற்கான பதில், படத்தில் உள்ளது. படத்தை இல்லை இல்லை படம் முழுக்க தன் பின்னணியால் சுமக்கிறார் யுவன். பருத்திவீரனில் யுவனுக்கு என்ன பங்கு இருந்ததோ, அதே அளவு, அதை விட கொஞ்சம் அதிகமாகவே மெனக்கெட்டிருக்கிறார் யுவன்.
View this post on Instagram
கார்த்தி, சமீபமாக குடும்ப படங்களில், அது கிராம பின்னணி கொண்ட படங்களில் நடிப்பது நாம் அறிந்தது தான். ஆனால், அவர் முழுநீள கிராமத்து ஆக்ஷனில் நடித்து பல ஆண்டுகள் ஆகிறது. இன்னும் சொல்ல வேண்டுமானால், பருத்துவீரன், கொம்பனுக்கு அடுத்து, அது மாதிரியான படங்களில் அவர் தோன்றவில்லை என்று தான் கூற வேண்டும்.
கிராமிய சென்டிமெண்ட் படங்களில் தலைகாட்டி வந்த கார்த்தி, சரியான நேரத்தில் விருமனை டிக் செய்திருக்கிறார். பளபளவென தீட்டி வைத்த கத்தி மாதிரி, பாய்ந்திருக்கிறார். அவரது பாய்ச்சலுக்கெல்லாம் பாதரசம் தடவிய மினுமினுப்பை தந்துள்ளார் யுவன்சங்கர் ராஜா.
விருமனில், ஆடியோ ட்ராக்கில் இல்லாத இருபாடல்கள் படத்தில் உள்ளது. ஒன்று இளையராஜா பாடும் டைட்டில் சாங். மற்றொன்று எண்ட் கார்டில் யுவன் பாடும் மற்றொரு பாடல். இந்த இரண்டுமே, கேட்க அவ்வளவு இனிமை. உண்மையின் விருமன், யுவனுக்கு ‛கம் பேக்’ தான். இந்த யுவனை தான் தேடிக்கொண்டிருந்தார்கள். தேனிக்குள் என்ன சத்தம் எல்லாம் தர முடியும், அதை தாண்டி இதையும் தர முடியும் என்பதை தந்திருக்கிறார். அதை முத்தையா நன்கு பயன்படுத்தியிருக்கிறார், கார்த்தி நன்கு நடித்திருக்கிறார்.
View this post on Instagram
அனைவரும் குறிப்பிட மறந்த மற்றொரு விசயம், அதிதிக்கு ஒரு குத்து ட்ராக் இருக்கிறது. அது ஒன்று போதும், அதிதியின் அதீத திறமையை அறிய. இப்படி விருமன், பலருக்கு ‛ரீ எண்ட்ரியும்... நியூ எண்ட்ரியும்’ கொடுத்திருக்கும் கொலை மாஸ் படம்!