Virat Anushka: விருது விழாவில் அசத்தல் லுக்... க்யூட்டாக வந்து சிக்ஸர் அடித்த விராட் - அனுஷ்கா ஜோடி!
மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் எடுக்கப்பட்ட விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Virat Anushka : மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் எடுக்கப்பட்ட விராத் கோலி-அனுஷ்கா சர்மாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விராத்-அனுஷ்கா
கிரிக்கெட் உலகிலும் சரி, பாலிவுட் உலகில் சரி அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படும் க்யூட் ஜோடி விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா. 2013ஆம் ஆண்டு ஒரு விளம்பரப்படத்துக்காக இவர்கள் இருவரும் இணைந்து நடித்த நிலையில், இருவரும் காதலில் விழுந்தனர். விளம்பரத்திலேயே இவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை ஈர்த்த நிலையில் இருவரும் அதன் பின்னர் டேட் செய்து வருவதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
அதன்பின் விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டில் கலந்துகொள்ள வருகை தரும் நகரங்களில் அனுஷ்காவும், அனுஷ்காவின் படப்பிடிப்பு தளங்களில் விராட்டும் தென்படத்தொடங்கிய நிலையில், இவர்கள் இருவருமே தங்கள் காதலை உறுதி செய்யவில்லை.
ஆனால் 2014 நவம்பர் மாதம் ஸ்ரீலங்காவுக்கு எதிரான போட்டியில் அரை சதமடித்த கோலி, பெவிலியனிலிருந்த அனுஷ்கா ஷர்மாவை நோக்கி ஃப்ளையிங் கிஸ்ஸை பறக்கவிட்டு தங்கள் காதலை உறுதி செய்ய, அதன் பின் இருவரும் காதல் பறவைகளாக உலாவரத் தொடங்கினர். இதனை அடுத்து, 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் தேதி கோலாகலமாக இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
கியூட் போட்டோ
இப்படி இருக்கும் நிலையில், அடிக்கடி இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
Virat kohli and Anushka sharma are made for each other 💜
— Ameee ♥ (@kohlifanAmeee) March 23, 2023
Best couple in cricket history ✨pic.twitter.com/s8OjWyQJQ7
அந்தவகையில், தற்போது இவர்களின் க்யூட் போட்டோ இணையத்தில் பல லைக்ஸ்களை குவித்து வருகின்றது. மும்பையில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, தாறுமாறான லைக்ஸ்களை குவித்து வருகிறது.
இதற்கிடையில், 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க