Chiyaan 61 : தொடங்கியது பா. ரஞ்சித் - விக்ரம் படம்! படத்தின் பூஜையில் கெத்தாக கலந்துகொண்ட விக்ரம்!
பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் #சியான்61 படத்தின் பூஜை இன்று நடைபெற்றது
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கும் நிலையில், இந்த படம் எப்போதும் தொடங்கும், யார் யார் படத்தில் நடிக்கிறார்கள் என்பது குறித்தான தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்தன. அதே சமயம் ‘சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கப்போவதாக தகவல் பரவிய நிலையில் அந்த படத்திற்கான கதாபாத்திர அறிமுகத்திற்கான ஸ்டில்ஸ் வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் #சியான்61 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜை நடக்கும் நிகழ்ச்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேரலை செய்தனர்.
#Chiyaan61 - Pooja - #ChiyaanVikram | Pa Ranjith | Studio Green | Neelam Productions https://t.co/fqJ2FQsgnF@StudioGreen2 @sooriaruna @Kalaiazhagan15 @proyuvraaj @mugeshsharmaa
— Chiyaan Vikram Fans (@chiyaanCVF) July 16, 2022
மேலும் பா. ரஞ்சித்தின் முதல் திரைப்படத்தில் இருந்து இசையமைத்து வந்த சந்தோஷ் நாராயணன் பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதையடுத்து, நடிகர் விக்ரம், பா. ரஞ்சித் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த படத்தின் பூஜையின்போது நடிகர் சிவக்குமார், ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, நடன இயக்குநர் சாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
Now Ready For sampavam🔥🔥🎉😍😎 #ChiyaanVikram #Chiyaan61 @Kalaiazhagan15 @sooriaruna @beemji pic.twitter.com/Nz9GHdJ7VV
— Beema Prabu (@Prabhak87006615) July 16, 2022
மேலும், #சியான்61 படத்தின் பூஜை நிகழ்வு நடந்து வரும் வேளையில் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் #Chiyaan61 என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், மறுபுறம் பா. ரஞ்சித்தின் ரசிகர்களும் #PaRanjith என்ற ஹேஸ்டேக்கை தன் பங்குக்கு இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்