மேலும் அறிய

விஜயகாந்த் வீடு எம்.ஜி.ஆர். வீடு மாதிரி.. பொன்னர் சங்கர் உருவானது இப்படித்தான் - தியாகராஜன் பேட்டி

ஒருமுறை ஹரியோட படத்துக்கு தமிழ்ன்னு தலைப்பு வைகுறப்போ, அவர் கைப்பட எழுதி தர சொல்லி கேட்டோம். அதையேதான் டைட்டில்ல பயன்படுத்தினோம்.

80 களில் முன்னணி நடிகராக வலம் வந்த தியாகராஜன் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையூர் மம்பட்டியான், நீங்கள் கேட்டவை என அவருடைய பெயரை இன்றும் சொல்லும் திரைப்படங்கள் உண்டு. அவருடைய மகனை நடிகராகவே வளர்த்து எல்லா வகையான பயிற்சியும் கொடுத்து நடிக்க வைத்தார். 90 கள் மற்றும் 2000த்தில் முக்கிய கதாநாயகனாக இருந்த அவர் சில தோல்விகளாலும், பெர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னைகளாலும் காணாமல் போனார். தற்போது தந்தை தியாகராஜன் இயக்க, பிரசாந்த் ஹீரோவாக அந்தாதுன் திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். தியாகராஜன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் விஜயகாந்த், எம்ஜிஆர், கலைஞர் குறித்து பேசி இருந்தார்.

விஜயகாந்த்

விஜயகாந்த் குறித்து பேசிய போது, "விஜயகாந்த் ரொம்ப வெற்றிகரமான மனிதர். படம் நடிச்சாரு, கட்சி ஆரம்பிச்சாரு, ஜெய்ச்சாரு, எதிர்க்கட்சி தலைவர் ஆனார், காலேஜ் ஆரம்பிச்சார்… அவருடைய பயணம் ரொம்ப வெற்றிகரமானது. அவர் வீட்டுல எம்.ஜி.ஆர். வீடு மாதிரி எப்போதும் 10, 20 பேர் சாப்பிட்டுட்டு இருப்பாங்க. உதவி இயக்குனர்களுக்கு எல்லாம் நெறைய செஞ்சிருக்காரு. புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி இருக்காரு, சினிமாவை ரசித்த ஒரு நல்ல நண்பர் அவர்", என்றார்.

விஜயகாந்த் வீடு எம்.ஜி.ஆர். வீடு மாதிரி.. பொன்னர் சங்கர் உருவானது இப்படித்தான் - தியாகராஜன் பேட்டி

எம்.ஜி.ஆர்.

எம்ஜிஆர் பற்றி கேட்ட போது, "எம்.ஜி.ஆர் என்னுடைய நலம் விரும்பி. எனக்கு ஒருநாள் படப்பிடிப்புல விபத்து ஆகிடுச்சு. அதை எம்.ஜி.ஆர். செய்தில பார்திருக்கார். உடனே எனக்கு ஃபோன் வருது, எம்.ஜி.ஆர் வர்றாரு உங்களை பார்க்கன்னு சொல்றாங்க. எனக்கு கையும் ஓடல காலும் ஓடல, வந்து பார்த்து நலம் விசாரிச்சுட்டு, ஏன் இப்படி பார்த்து பாதுகாப்பா பண்ண வேண்டாமான்னு சொன்னார். அப்புறம் ஒரு நாள் நான் பாக்சிங் கத்துட்டு இருந்த நேரம், மக்கள் பார்வையில் லைவ்வா பாக்சிங் பண்ண போறேன்னு ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்றத பாத்துட்டு, என்கிட்ட வந்து, உண்ண நம்பி எத்தனை தயாரிப்பாளர்கள் பணம் போட்ருப்பாங்க, பாக்சிங் எல்லாம் பண்ணா ஏதாவது அடி விழுந்தா எத்தனை பேருக்கு கஷ்டம் என்றார். அதுவும் இல்லாமல் முகத்துல அடிபட்ட ஒண்ணுமே பண்ண முடியாது என்று கூறி இனிமே பாக்சிங் பண்ணாதன்னு சொன்னார், அன்றில் இருந்து பாக்சிங் செய்வதில்லை." என்று கூறினார். 

தொடர்புடைய செய்திகள்: கட்டிப்பிடி வைத்தியத்தில் கல்லா கட்டும் நபர்! ஒரு மணி நேரத்துக்கு ரூ.7 ஆயிரம்! குவியும் மக்கள்

கலைஞர்

கலைஞர் குறித்து கேட்கையில், "எனக்கு தமிழ் மேல ரொம்ப பற்று அதிகம். அதனால அவர் மேலையும் அதிகம். ஒருமுறை ஹரியோட படத்துக்கு தமிழ்ன்னு தலைப்பு வைகுறப்போ, அவர் கைப்பட எழுதி தர சொல்லி கேட்டோம். அதையேதான் டைட்டில்ல பயன்படுத்தினோம். அப்போல இருந்து பிரஷாந்த் மேல ரொம்ப பாசம் அவருக்கு. ரொம்ப வாஞ்சையா பக்கத்துல உக்கார வச்சுக்குவாரு." என்று கூறினார்.

விஜயகாந்த் வீடு எம்.ஜி.ஆர். வீடு மாதிரி.. பொன்னர் சங்கர் உருவானது இப்படித்தான் - தியாகராஜன் பேட்டி

பொன்னர் சங்கர்

பொன்னர் சங்கர் குறித்து பேசுகையில், "எனக்கு கலைஞர் உடைய வரலாற்று கதையில் ப்ரஷாந்த நடிக்க வைக்கணும்னு ஆசை. அப்போ அவர்கிட்ட போயி கேட்டேன், அவர் நான் சிஎம்மா இருக்கும்போது அதுக்கெல்லாம் நேரம் இருக்காது, நான் ஏற்கனவே எழுதின ரெண்டு நாவல் இருக்கு அதுல ஏதாவது ஒன்னு பண்ணுன்னு சொல்லி ரெண்டு புக்கையும் கொடுத்தார். பொன்னர் சங்கர், பாயும்புலி பண்டார வணிகன் ரெண்டு நாவலையும் கொடுத்து புடிச்சத பண்ண சொன்னார். நான் பொன்னர் சங்கர தேர்வு செஞ்சதுல ரொம்ப சந்தோஷம் அவருக்கு. அதுக்கு வள்ளுவர் கோட்டதுல பூஜை போட்டது இன்னும் ரொம்ப சந்தோஷம்." என்றார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget