கட்டிப்பிடி வைத்தியத்தில் கல்லா கட்டும் நபர்! ஒரு மணி நேரத்துக்கு ரூ.7 ஆயிரம்! குவியும் மக்கள்
நிச்சயம் நம் அனைவருக்கும் மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் அரவணைப்பு, ஒரு அன்பு என்பது தேவைப்படுகிறது. இத்தகைய அரவணைப்பை ஒருவர் இங்கிலாந்தில் தொழிலாகவே செய்து வருகிறார்.
இங்கிலாந்தில் தொழில்முறை கட்டிப்பிடிக்கும் பணியை மேற்கொண்டு வருவபருக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் தொடர்பான காட்சி இடம் பெற்றிருக்கும். அதாவது மன அழுத்தத்தில் இருக்கும் போது கட்டியணைத்தல் என்பது அந்த இறுக்கத்தை குறைக்கும் என சொல்லப்பட்டிருக்கும். இது பல காலமாக நடைமுறையில் இருந்தாலும் இந்த படத்திற்கு பின் மக்களிடையே மிகப் பெரிய அளவில் பிரபலமானது. இது தொடர்பாக உலகளவில் பல ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நிச்சயம் நம் அனைவருக்கும் மன அழுத்தம் நிறைந்த நேரத்தில் அரவணைப்பு, ஒரு அன்பு என்பது தேவைப்படுகிறது. இத்தகைய அரவணைப்பை ஒருவர் இங்கிலாந்தில் தொழிலாகவே செய்து வருகிறார். Trevor Hooton என்ற 30 வயது இளைஞர் தான் பிரிஸ்டலில் பல மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட எம்ப்ரஸ் கனெக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் இதனை செய்து வருகிறார். ஆனால் அவரது பணி பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாக Trevor Hooton வருத்தம் தெரிவித்துள்ளார்.
சிலர் அதை பாலியல் வேலை என்று நினைப்பதாகவும், மனித தொடர்புகளை உருவாக்குவதற்காகவே இத்தைய வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சிலருக்கு முதலில் இது கொஞ்சம் சங்கடமாக இருக்கும்.காரணம் அடிப்படையில் நாம் அந்நிய நபர்களுடன் இத்தகைய பழக்கத்தை முயற்சிக்க விரும்ப மாட்டார்கள். அவர்களின் தேவை அறிந்து அதற்கேற்ப இந்த அரவணைப்பு முறையானது வழங்கப்படுவதாக Trevor Hooton தெரிவித்துள்ளார். மேலும் இந்த கட்டிப்பிடி வைத்தியத்தில் பாலுறவின் தொடக்கத்தை உணர ஆரம்பித்தால் அவர்களிடம் இருந்து தான் பின்வாங்குவதாகவும், அது பாலுறவு அல்லாத உணர்வாக இருக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறுகிறார்.
இது மனிதர்களிடையேயான தொடர்பு மற்றும் நம்பிக்கையை வளர்ப்பது பற்றியது என்பதால் நான் ஒருவரை கட்டிப்பிடிக்கும்போது, அந்த தொடுதலின் மூலம் நான் அக்கறை, பாசம் மற்றும் நல்லெண்ணத்தை ஊற்றுகிறேன் என Trevor Hooton தெரிவிக்கின்றார்.
ஒரு மணி நேர அரவணைப்புக்கு ரூ. 7,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டிப்பிடி வைத்தியத்தைப் பெற மக்கள் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் மற்றவர்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ள சிரமப்படும் மக்களுக்கு உதவ கனெக்ஷன் கோச்சிங் என்ற சேவை வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்