GOAT Movie Leaked: இணையத்தில் லீக் ஆன “கோட்” படக்காட்சி: விஜய் - பிரசாந்த் இடையே மோதல்: அதிர்ச்சியில் படக்குழு!
GOAT Movie Scene Leaked: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் முழுவீச்சில் உருவாகி வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு தள காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் நடிகர் விஜய் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள திரைப்படம் கோட்(GOAT) தன் அரசியல் எண்ட்ரியை சமீபத்தில் அறிவித்த விஜய்யின் 68ஆவது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது.
அரசியல் எண்ட்ரியால் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய்யின் கடைசி இரண்டு படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று என்பதால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோட் படத்தின் ஷூட்டிங் தள காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுதேவா, பிரசாந்த், விஜய் மூவரும் இணைந்து ஷூட்டிங்கில் பங்கேற்கும் இந்தக் காட்சியில், பிரசாந்துக்கும் விஜய்க்கும் பிரச்னை ஏற்படுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில் கோட் படக்காட்சி இணையத்தில் லீக் ஆகியுள்ளது விஜய் ரசிகர்கள் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
“தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்து அறிவித்துள்ள நடிகர் விஜய், முன்னதாக கோட் படப்பிடிப்புத் தளத்தில் அரசியல் எண்ட்ரிக்குப் பின் ரசிகர்கள் முன்னிலையில் முதன்முறையாகத் தோன்றினார். புதுச்சேரி படப்பிடிப்புத் தளத்தில் தொடர்ந்து 2 நாள்களாக ரசிகர்களை சந்தித்த விஜய், அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின.
முன்னதாக பொங்கல் ஸ்பெஷல் அப்டேட்டாக விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் இணைந்திருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
விஜய் தந்தை - மகன் என 2 கதாபாத்திரங்களில் கோட் திரைப்படத்தில் நடிக்கும் நிலையில், விஜய்யின் இளமைப்பருவ கதாபாத்திரத்துக்காக கலிஃபோனியாவில் டீ.ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
டைம் ட்ராவலை அடிப்படையாகக் கொண்டு கோட் திரைப்படம் அமைந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.