Vijay interview : ரசிகர்கள் விருப்பப்பட்டால் தளபதி டூ தலைவன்... நேர்காணலில் அரசியல் முடிச்சை அவிழ்த்த விஜய்!!
தளபதி விஜய் ஆக இருக்கும் தான் தலைவன் விஜய் ஆக மாறுவது ரசிகர்கள் கையில்தான் உள்ளது என்று சன் தொலைக்காட்சி பேட்டியில் பரபரப்பாக கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வரும் 14-ந் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் நடிகர் விஜயிடம் நேர்காணல் செய்யும் நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பானது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை நெல்சனிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, நெல்சன் நடிகர் விஜயிடம் நடிகர் விஜயிடம் நெல்சன், இளைய தளபதியிடம் இருந்து தளபதி ஆனீர்கள். தளபதியில் இருந்து எப்போது தலைவன் ஆவீர்கள்? என்று கேட்டார். அப்போது, அதற்கு பதிலளித்த பேசிய விஜய், “ நான் தளபதியில் இருந்து இருந்து தலைவன் ஆக வேண்டுமா? என்பதை ரசிகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சூழ்நிலையும் முடிவு செய்யும். எனக்கு விஜய்யாக இருப்பதுதான் பிடிக்கும் என்றார்.





















