Maharaja Trailer: ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் விஜய்சேதுபதி.. மகாராஜா படத்தின் ட்ரெய்லர் அப்டேட் இதோ!
குரங்கு பொம்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தான் இந்த படத்தை இயக்குகிறார். மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள “மகாராஜா” படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
குரங்கு பொம்மை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தான் இந்த படத்தை இயக்குகிறார். மகாராஜா படம் விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன் தாஸ், நட்டி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அஜனீஸ் லோக்நாத் இசையமைக்கும் இந்த படத்துக்கு தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்கிறார். பேஷன் ஸ்டூடியோஸ், தி ரூட் கம்பெனி, திங் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
The wait is almost over 👑
— VijaySethupathi (@VijaySethuOffl) May 29, 2024
Get ready to witness the world of #Maharaja from tomorrow 5 PM#MaharajaTrailerFromTomorrow#MakkalSelvan @VijaySethuOffl
Written and Directed by @Dir_Nithilan@anuragkashyap72 @mamtamohan @Natty_Nataraj @Abhiramiact@AjaneeshB @Philoedit @DKP_DOP… pic.twitter.com/DxvqMrODVk
இந்த படத்தின் ஓடிடி உரிமம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும், சேட்டிலைட் உரிமம் விஜய் தொலைக்காட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் இருக்கும் மகாராஜா படம் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முடி திருத்தும் தொழிலாளியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது போஸ்டர் மூலம் தெரிய வருகிறது.