Maharaja First Look: அடிதடி.. அரிவாள்.. 50ஆவது படத்தில் மிரட்டும் விஜய் சேதுபதி.. மஹாராஜா போஸ்டர் வெளியீடு!
விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படமான மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Maharaja First Look: தமிழில் சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் சேதுபதி, தற்போது தன் எதார்த்தமான நடிப்பால் மக்கள் செல்வன் பட்டம் பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். ஹீரோவாக நடிப்பதற்கு முன்பு புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, சுந்தரபாண்டியன், நான் மகான் அல்ல படங்களில் துணை நடிகராக இருந்த விஜய் சேதுபதி, தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பாலிவுட் வரை செல்லும் அளவுக்கு மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளார்.
2012ஆம் ஆண்டு வெளிவந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், பீட்சா படங்கள் விஜய் சேதுபதி உச்சத்துக்கு செல்ல அங்கீகாரத்தை கொடுத்தன. அதே வரிசையில் வெளிவந்த சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படங்கள் விஜய் சேதுபதியை மக்கள் செல்வனாக அழைக்க வைத்தது.
துணை நடிகராக இருந்து ஹீரோவான இவர், மாஸ் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் சூப்பர் வில்லனாக மாறி தனது நடிப்பின் மற்றொரு முகத்தைக் காட்டி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளார். விக்ரம் வேதா, விக்ரம், மாஸ்டர், விடுதலை படங்களில் வில்லனாக நடித்து கெத்து காட்டிய இவர், இந்தியில் ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்தில் நடித்துள்ளார். அட்லி இயக்கத்தில் வெளிவந்துள்ள ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் விஜய்சேதுபதி அலை அடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் 50வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. குரங்கு பொம்மை படத்தை இயக்கி பெரிதும் பாராட்டப்பட்ட நிதிலா ஸ்வாமிநாதன் இயக்கும் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்துள்ளார்.
படத்தில் மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி என பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேவராஜ், அனுபமா, ஜெயச்சந்திரன், ஒற்றன் துரை, ஸ்ரீதரன் முன்னிலையில் வெளியாகியுள்ளது. கையில் அரிவாளுடன் உடல் முழுவதும் ரத்தம் சொட்ட சொட்ட அமைதியாக அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியை போலீசார் பார்க்கும் காட்சி இந்தப் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
#MaharajaFirstLook@Dir_nithilan @PassionStudios_ @TheRoute @Sudhans2017 @Jagadishbliss @anuragkashyap72 @Natty_Nataraj @mamtamohan @Abhiramiact @AjaneeshB @Philoedit @DKP_DOP @ActionAnlarasu @ThinkStudiosInd @infinit_maze @jungleeMusicSTH @Donechannel1 #VJS50FirstLook #VJS50… pic.twitter.com/7fF5Y2rDao
— VijaySethupathi (@VijaySethuOffl) September 10, 2023
எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தில் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தும் விஜய் சேதுபதி இதிலும் தனது பாணியில் வினோதமான கேரக்டரில் உற்சாகப்படுத்த உள்ளார் என்பதில் சந்தேகமில்லை என்றே ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: Vijay Tv serials: கமல்ஹாசன் தான் காரணமா... நேர மாற்றம் செய்யப்பட்ட சீரியல்கள்... அதிரடியாக அறிவித்த விஜய் டிவி!
Daiji First Look: அடுத்த ‘காந்தாரா'வா... ‘டைஜி’ பட போஸ்டரால் அசரடிக்கும் நடிகர் ரமேஷ் அரவிந்த்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

