Vijay Makkal Iyakkam: உறுப்பினர்களை சேர்க்க புதிய செயலி.. விஜய் மக்கள் இயக்க மகளிர் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு
விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் பல முக்கிய விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், அதில் பல விஷயங்கள் குறித்து நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டம்:
நடிகர் விஜய் தலைமையில் விஜய் மக்கள் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இது விரைவில் அரசியல் கட்டியாக மாறலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் 100-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று இருக்கின்றனர். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு அணிகளும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், இன்று சென்னை அருகே உள்ள பனையூரில் உள்ள மக்கள் இயக்க தலைமை அலுவகலத்தில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆலோசனைக் கூட்டம் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.விஜய் பயிலகம், சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு என விஜய் மக்கள் இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வழக்கறிஞர் அணி, ஐ.டி. அணி என தனித்தனியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சூழலில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணியை வலுப்படுத்துவதற்காக மாவட்ட மகளிர் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் உறுப்பினர்களை அதிகரிக்க புதிய செயலியை அறிமுகப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் சேர்க்கை:
மகளிர் அணி நிர்வாகிகள் மத்தியில் பேசிய மக்கள் இயக்க பொதுச் செயலாளர் bussy ஆனந்த் தெரிவித்ததாவது: ”மாதத்தில் ஒரு முறையாவது மகளிர் அணி நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட வேண்டும். முதுநிலை படிக்கும் கல்லூரி மாணவிகளை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள பெண்கள் வாக்காளர்கள் விவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். தங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்கள் சாதித்தால், நேரடியாக சென்று வாழ்த்த வேண்டும்.
வழக்கறிஞராக இருக்கும் மகளிர் அணி நிர்வாகிகள், பகுதியைச் சேர்ந்த பெண்களுக்கு சட்ட ஆலோசனை தேவைப்பட்டால் வழங்க வேண்டும். விரைவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்காக, மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது அவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார். தொடர்ந்து கல்லூரி மாணவிகள் பலரும் ஆன்லைன், வாயிலாக மக்கள் இயக்கத்தில் சேர்க்க கோரிக்கை வைத்து வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். இந்த கூட்டத்தில் சுமார் 3000 நபர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” குறிப்பிடத்தக்கது.