மேலும் அறிய

Lokesh Kanagaraj: நிம்மதியா தூங்க கூட இல்ல.. லோகேஷ் கனகராஜை நினைத்து வருத்தப்படும் ரசிகர்கள்..!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடைசியாக 8 மணி நேரம் தூங்கியது எப்போது தெரியுமா...?

லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குநராக உருவாகி இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்கிற ஒரு சிறிய பட்ஜட் படத்தில் தொடங்கிய இவரது பயணம் இன்று பான் இந்தியத் திரைப்படமான லியோ வரை வந்து நிற்கிறது. லோகேஷ் சினிமேட்டிக் யுனிவர்ஸ் என தமிழ் சினிமாவில் முதல் முறையாக தனக்கென ஒரு தனி ஜானரை உருவாக்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தற்போது அவர் இயக்கியிருக்கும் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில். அனைத்து தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் யூடியூப் சேனல்களிலும் அவரது முகம் மட்டுமே நிறைந்திருக்கிறது. 

லியோ

லியோ படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் லோகேஷ் கனகராஜ் இரவுப் பகலாக நேர்காணல்களை கொடுத்து வருகிறார். இந்த நேர்காணல்களில்  பெரும்பாலும் லியோ படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து வரும் லோக்கி அவ்வப்போது தன்னைப் பற்றிய சில சுவாரஸ்யமானத் தகவல்களையும் பகிர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லியோ படம் அறிவிக்கப் பட்டபோது இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என முன்னதாகவே அறிவிக்கப் பட்டது. இப்படி படத்தின் ரிலீஸை முன்னதாகவே அறிவித்து அந்த அழுத்தத்தில் வேலை செய்வதில் தனக்கு விருப்பம் இல்லை என்று சமீபத்தில் வெளிப்படையாக பேசியிருந்தார்.  இனிமேல் இந்த மாதிரியான நிர்பந்தங்களுக்கு கீழ் தான் வேலை செய்யப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். 

கடைசியாக 8 மணி நேரம் தூங்கியது எப்போது

ஒரு படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை வரிசையில் வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய தனிப்பட்ட  நேரத்தை எப்படி செலவிடுகிறார் என்கிற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. சமீபத்தில் அவரிடம் கடைசியாக 8 மணி நேரம் தொடர்ச்சியாக எப்போது தூங்கினார் என்கிற கேள்விக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்துள்ள பதில் என்னத் தெரியுமா. லியோ படத்தின் சென்சார்  நிறைவடைந்த பின்னரே தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு 8 மணி நேரம் தூங்கியதாக அவர் தெரிவித்தார்.

தலைவர் 171

அடுத்ததாக தான் இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தை பொறுமையாக தனக்கான நேரத்தை எடுத்துக் கொண்டு இயக்க இருப்பதாக அவர் தெரிவித்தார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தின் நடிகர்கள் குறித்து பலவிதமான சர்ப்ரைஸ் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை தான் ஐமேக்ஸ் கேமராவில் இயக்க இருப்பதாகவும் மலையாள திரைக்கதை எழுத்தாளர்களுடன் பணியாற்ற இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லியோ முன்பதிவு

விஜய், த்ரிஷா, மிஸ்கின், பிரியா ஆனந்த், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இசையமைத்துள்ள லியோ திரைப்படம் வருகின்ற 19 ஆம் தேதி வெளியாகிறது.  லியோ படத்திற்கான முன்பதிவுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளில் லியோ படம் டிக்கெட் விற்பனைகளில் சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More

தலைப்பு செய்திகள்

ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
ரஜினியின் அந்த ஒரு குணம் தான் 'ஜெயிலர் 2' மாஸ் வெற்றிக்கு காரணம்: சூப்பர் ஸ்டாரைப் புகழ்ந்து தள்ளிய சீமான்
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
புஷ்பா 2, துரந்தர் 2 படங்களுக்கு அடுத்து ஜெயிலர் 2.. டிக்கெட் புக்கிங்கில் ரஜினி படைத்த சாதனை!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!
TCS வேலையை உதறிவிட்டு வந்த நடிகர்.. 75 படங்களுக்குப் பிறகு ஜெயிலர் 2 கொடுத்த அங்கீகாரம்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget