Vijay antony : மலேசியத் தீவில் நடந்த படப்பிடிப்பில் விபத்து.. விஜய் ஆண்டனிக்கு சிகிச்சை
பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்துள்ளது.
மலேசியாவில் லங்காவி தீவில் நடந்த படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
புரியாத பாடல் வரிகளுக்கு இசையமைக்கும் ஹாரிஸ் ஜெயராஜிற்கு போட்டியாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக எண்ட்ரியானவர் விஜய் ஆண்டனி. 2006 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தில் “சாத்திக்கடி” என்ற பாடலில் ஆரம்பித்த இவரின் இசைப்பயணம் வற்றாத நதி போல்
ஓடிக்கொண்டு இருக்கிறது.
அத்துடன், “டைலாமோ டைலாமோ”, “மச்சக்கன்னி”, “நாக்கு முக்கா”, “மேரே பியா”, “ஆத்திச்சூடி”, “உசுமு லார்சே”, “இச்சு இச்சு”, “மஸ்காரா போட்டு மயக்குறியே” போன்ற பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இசையோடு நிறுத்திக்கொள்ளாமல், திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.
இசையமைப்பாளர், பின்னணி பாடகர், நடிகர், திரைப்படத் தொகுப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல பட்டங்களை சுமந்து இருக்கும் ஆல் இன் ஆல் அழகு ராஜாவின் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம், பிச்சைக்காரன். அருள் செல்வகுமாரின் இயக்கத்தில், உண்மையான கதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம், பலருக்கும் நம்பிக்கை உணர்வை கொடுத்தது. இந்த படம் ஹிட்டானதையடுத்து பிச்சைக்காரன் 2 படத்தின் பேச்சும் ஆரம்பித்து, அப்படத்தின் ஷூட்டிங்கும் நடைபெற்று வருகிறது.
View this post on Instagram
தற்போது, பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்று வரும் நிலையில் விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்துள்ளது.படப்பிடிப்பு நடந்த லங்காவி தீவிலிருந்து மலேசிய நாட்டின் தலைநகரமான கோலாலம்பூருக்கு சிகிச்சைக்காக விஜய் ஆண்டனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பிற்காக அனுமதியின்றி உயர் நீதிமன்ற வளாகம், பார் கவுன்சில் வளாகம் மற்றும் என்.எஸ்.சி போஸ் ரோடு போன்ற தடை செய்யப்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி ட்ரோன் பறக்கவிடப்பட்டுள்ளது. இதனை நேரில் பார்த்த போலீசார் படக்குழுவினரை விசாரித்தனர்.
தடை செய்யப்பட்ட பகுதியில் ட்ரோன் பறக்கவிட்ட படக்குழுவை சேர்ந்த நவீன் குமார், சுரேஷ் மற்றும் ரூபேஷ் ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களின் கேமராவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் எச்சரித்து அவர்களை ஜாமீனில் விடுவித்தனர்.