Nayanthara Vignesh Shivan Wedding : கண்மணி நயன்தாராவுக்கு கடலில் கல்யாணம்.. வீடியோவாக வெளியான நயன் - சிவன் கல்யாண பத்திரிகை..
நாளை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஷெரட்டனில், காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
Nayanthara Vignesh Shivan Wedding: கோலிவுட்டின் ’லேடி சூப்பர் ஸ்டார்’ எனக் கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா, இயக்குநரும் தன் நீண்ட நாள் காதலருமான விக்னேஷ் சிவனை நாளை (ஜூன்.09) திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களது திருமணத்தால் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரமும் பார்ட்டி மோடில் உள்ளது.
வைரலாகும் பத்திரிக்கை
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இந்த ஜோடியின் திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக முதலில் சொல்லப்பட்டநிலையில் பின்னர் மகாபலிபுரத்தில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியானது.
View this post on Instagram
இந்நிலையில், தற்போது நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணப் பத்திரிக்கை எனக் கூறி அனிமேட்டட் பத்திரிக்கை ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.
இந்து முறைப்படி திருமணம்
இந்து முறைப்படி நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்ய உள்ளதாக முன்னதாக நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவன் தெரிவித்த நிலையில், பிள்ளையார் படம் உள்ள இந்தப் பத்திரிகை தற்போது இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது.
நாளை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் ஷெரட்டனில் காலை 5.30 மணி முதல் 7 மணி வரையிலான முகூர்த்த நேரத்தில் இவர்களது திருமணம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
200 பேர் மட்டுமே பங்கேற்பு
இந்த திருமணத்தில் 200 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 30 பேர் ரஜினி, விஜய், அஜித், நெல்சன், விஜய்சேதுபதி, சமந்தா போன்ற விஐபிக்கள் எனவும் சொல்லப்படுகிறது.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
உல்லாசப் பறவைகள்
அதனைத் தொடர்ந்து பல விருது நிகழ்ச்சிகளில் ஒன்றாக வலம் வந்த இந்த ஜோடி, தொடர்ந்து உள்ளூர் தொடங்கி வெளிநாடுகள் வரை உல்லாசப் பறவையாக சுற்றி மகிழ்ந்ததை இவர்களது ரசிகர்கள் சியர் செய்து மகிழ்ந்து வந்தனர்.
தொழிலும் ஒன்றாக பயணம் செய்த இவர்கள் ‘ரெளடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் தயாரித்த ‘ராக்கி’ ‘கூழாங்கல்’ உள்ளிட்ட படங்கள் கவனம் பெற்றன.
அண்மையில் நயன்தாரா சமந்தா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்கியிருந்த விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தின் 62 ஆவது படத்தை இயக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.