மேலும் அறிய

Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்

Royal Enfield Meteor 350 Rivals: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்ட் மீடியர் 350-க்கு போட்டியாக கிடைக்கும், 5 பைக் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350-க்கு மாற்றாக 5 சிறந்த மோட்டார் சைக்கிள்கள்.
  • பஜாஜ் அவெஞ்சர் 220, ஹோண்டா ஹார்னெஸ் CB350 செயல்திறனில் போட்டி.
  • ஜாவா 42 FJ, யெஸ்டி ரோட்ஸ்டர் நவீன தோற்றம், செயல்திறன் கொண்டவை.
  • ஹார்லி டேவிட்சன் X440T அதிக செயல்திறன், பிரீமியம் தேர்வாக விளங்குகிறது.

Royal Enfield Meteor 350 Rivals: ராயல் என்ஃபீல்ட் மீடியர் 350 வாங்க விரும்புவோர், அதற்கு முன்பாக பரிசீலிக்க வேண்டிய 5 மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ராயல் என்ஃபீல்ட் மீடியர் 350 போட்டியாளர்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் ராயல் என்ஃபீல்டின் மீடியர் 350 மோட்டார் சைக்கிளானது, ரெட்ரோ ஸ்டைல் க்ரூசர் மாடலாகும். 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த பைக்கின் விலையானது, ரூ.1.95 லட்சத்தில் தொடங்கி ரூ.2.18 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 349.34 J சீரிஸ் இன்ஜினை கொண்டு, 20.2 bhp மற்றும் 27 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. நிஜ உலக பயன்பாட்டில் லிட்டருக்கு 31 முதல் 35 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதேநேரம், இதற்கு போட்டியாகவே பல முன்னறி நிறுவனங்கள் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மைக்கு பெயர்போன வலுவான சில மாடல்களை உள்ளூர் சந்தையில் கொண்டுள்ளன.

அந்த பட்டியலில் ஹோண்டா ஹார்னெஸ் CB350, யெஸ்டி ரோட்ஸர், ஜாவா 42 FJ, ஹார்லி டேவிட்சன் X440T மற்றும் பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220 ஆகிய மாடல்கள் அடங்கும். இந்த போட்டியாளர்கள் ராயல் என்ஃபீல்ட் மீடியர் 350 மாடலுக்கு இணையான செயல்திறன், அம்சங்கள் மற்றும் க்ளாசிக் ஸ்டைலிங்கையும் கொண்டுள்ளன. சில மாடல்கள் சற்றே குறைந்த விலையிலும் கிடைக்கின்றன. எனவே, மீடியர் 350 மாடலை தேர்வு செய்வதற்கு முன்பாக பரிசீலிக்க வேண்டிய மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மீடியர் 350 மாடலுக்கு டஃப் கொடுக்கும் மாடல்கள்:

1. பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220

பஜாஜ் நிறுவனத்தின் அவெஞ்சர் க்ரூஸ் 220 மாடலின் தொடக்க விலையானது ரூ.1.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 220சிசி ஆயில் கூல்ட்  சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை கொண்டு, 18.77 bhp மற்றும் 17.55 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 13 லிட்டர் கொள்ளளவிற்கான எரிபொருள் டேங்கை கொண்டிருப்பதோடு, 3.8 லிட்டர் ரிசர்வ் கெபாசிட்டியையும் பெற்றுள்ளது. நிஜ உலகில் லிட்டருக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறதாம். மலிவான விலை மற்றும் எளிய அணுகல் மூலமாக அவெஞ்சர் க்ரூஸ் 220 மாடலானது மீடியர் 350-க்கு சரியான போட்டியாளராக திகழ்கிறது. குறைந்த எடை (163 Vs 191) மூலம் கூடுதல் மைலேஜ் தருகிறது.

2. ஹோண்டா ஹார்னெஸ் CB350

ஹோண்டா ஹார்னெஸ்  CB350 பைக் மாடலின் விலையானது ரூ.1.93 லட்சத்தில் தொடங்கி ரூ.2.16 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 348.36 சிசி ஏர் கூல்ட் இன்ஜின்  மூலம், 20.78 bhp மற்றும் 30 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. நிஜ உலகில் லிட்டருக்கு 35 முதல் 40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறதாம். அதாவது மீடியர் 350 மாடலை காட்டிலும் மலிவு விலையில் கிடைப்பதோடு, அதிகப்படியான ஆற்றல் மற்றும் மைலேஜ் மூலம் ஹார்னெஸ்  CB350 கவனத்தை ஈர்க்கிறது. 5 ஸ்பீட் கியர்பாக்ஸை கொண்டுள்ளதோடு, 15 லிட்டர் கொள்ளளவிற்கான எரிபொருள் டேங்கையும் பெற்றுள்ளது. 


Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்

3. ஜாவா 42 FJ

மீடியர் 350 மாடலுக்கான மாற்று மோட்டர் சைக்கிள் பட்டியலில் அடுத்ததாக இடம்பெற்று இருப்பது ஜாவா 42 FJ மாடலாகும். இதன் எக்ஸ் ஷோரூம் விலையானது ரூ.1.93 லட்சத்தில் தொடங்கி ரூ.2.07 லட்சம் வரை நீள்கிறது. 334 சிசி இன்ஜினை கொண்டு மீடியோர் 350 மாடலை காட்டிலும் மேம்பட்டு, 28.60 bhp மற்றும் 29.62 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. 12 லிட்டர் கொள்ளளவை கொண்டு லிட்டருக்கு 32 கிலோ மீட்டர் தூரம் வரை மைலேஜ் வழங்குகிறது. 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதிக செயல்திறன், கூடுதல் மாடர்ன் & ஸ்போர்டியர் லுக் உள்ளிட்டவை மூலம் ஜாவா 42 FJ ஆனது மீடியர் 350 மாடலுக்கு போட்டி அளிகிறது.


Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்

4. யெஸ்டி ரோட்ஸ்டர்

யெஸ்டி ரோட்ஸ்டர் மாடலின் தொடக்க விலையானது ரூ.1.97 லட்சத்தில் தொடங்கி ரூ.2.11 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 334 சிசி லிக்விட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை கொண்டு, 28.77 bhp மற்றும் 29.63 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. போல்ட் லைன்கள், கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் ஆகியவை யெஸ்டி ரோட்ஸ்டர் மாடலை தனித்துவமாக மாற்றுகிறது. லிட்டருக்கு 28 முதல் 29 கிலோ மீட்டர் மைலேஜ் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் அதிகப்படியான வேகம் மற்றும் மாடர்ன் லுக், ஸ்போர்டி க்ரூசர் தோற்றம் ஆகியவற்றின் மூலம் மீடியர் 350-க்கு சிறந்த மாற்றாக யெஸ்டி ரோட்ஸ்டர் விளங்குகிறது.


Royal Enfield Meteor 350: தம்பி நீ கிளம்பு..! மீடியர் 350-க்கு பட்ஜெட் இல்லையா - சேம் சேம் ஆக கிடைக்கும் 5 பைக் மாடல்கள்

5. ஹார்லி டேவிட்சன் X440T

இந்த பட்டியலில் கடைசியாக இடம்பெற்றுள்ள ஹார்லி டேவிட்சன் X440T, ரூ.2.80 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பட்டியலில் மீடியர் 350 மாடலை காட்டிலும் அதிக விலை கொண்ட வாகனம் இதுவாகும். தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்ட இந்த மோட்டார் சைக்கிளானது, 440 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்ட்  இன்ஜினை கொண்டுள்ளது. 27 bhp மற்றும் 38 Nm ஆற்றலை உற்பத்தி செய்து, லிட்டருக்கு 30 முதல் 35 கிலோ மீட்டர் மைலேஜ் தருவதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். அதிகப்படியான செயல்திறன், ப்ரீமியம் மாற்று மோட்டார் சைக்கிளாக ஹார்லி டேவிட்சன் X440T சந்தையில் கிடைக்கிறது.

Frequently Asked Questions

ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350 மாடலுக்கு போட்டியாக இருக்கும் மற்ற பைக்குகள் யாவை?

ஹோண்டா ஹார்னெஸ் CB350, யெஸ்டி ரோட்ஸ்டர், ஜாவா 42 FJ, ஹார்லி டேவிட்சன் X440T மற்றும் பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220 ஆகியவை மீடியோர் 350-க்கு போட்டியாக அமையும் பைக்குகள் ஆகும்.

பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220 மாடலின் சிறப்பம்சங்கள் என்ன?

ரூ.1.25 லட்சம் விலையில் கிடைக்கும் இந்த பைக், 220சிசி இன்ஜின், 13 லிட்டர் எரிபொருள் டேங்க் மற்றும் லிட்டருக்கு 35-40 கிமீ மைலேஜ் தருகிறது. இது மீடியோர் 350-க்கு மலிவான மாற்றாக உள்ளது.

ஹோண்டா ஹார்னெஸ் CB350, ராயல் என்ஃபீல்ட் மீடியோர் 350-ஐ விட சிறந்தது என கூறலாமா?

ஹார்னெஸ் CB350, மீடியோர் 350-ஐ விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கிறது. இது அதிகப்படியான ஆற்றல் மற்றும் மைலேஜை (லிட்டருக்கு 35-40 கிமீ) வழங்குகிறது.

ஜாவா 42 FJ மாடலின் செயல்திறன் எப்படி இருக்கும்?

ஜாவா 42 FJ, மீடியோர் 350-ஐ விட மேம்பட்ட 28.60 bhp மற்றும் 29.62 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. இது 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
Embed widget