Ajith Kumar Salary : 10 வருடத்திற்கு முன் அஜித் வாங்கிய சம்பளம் என்ன தெரியுமா மக்களே...கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
பத்து வருடத்திற்கும் முன்னாள் அஜித் குமார் வாங்கிய சம்பளத்திற்கும், இப்போதைய நிலைக்கும் 87 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
விஜய்யின் அரசியல் வருகைக்குப் பின் அஜித் குமாரின் சம்பளம் இன்னும் அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
விடாமுயற்சி
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவுக்கு வர இருக்கிறது. த்ரிஷா மற்றும் அர்ஜூன் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லைகா ப்ரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.
காத்திருந்து காத்திருந்து..
விடாமுயற்சி படத்தின் டைட்டில் வெளியாகி 300 நாட்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இதுவரை படம் குறித்த எந்த விதமான அப்டேடும் படக்குழு சார்பாக வெளியாகவில்லை. கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களை இன்னும் சீண்டிவிடும் வகையில் ஒரு தகவலை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம் . அதாவது விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிஸ் நிறுவனம் பெற்றுள்ளதே இந்த தகவல். இதனைத் தவிர்த்து அவ்வப்போது வெளிநாட்டில் இருந்தபடி நடிகர் அஜித் விதவிதமாக உடை அணிந்து போஸ் கொடுக்கும் புகைப்படங்கள் மட்டும் வெளியானபடி உள்ளன. அஜர்பைஜானின் நடைபெற்று வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் அடுத்தபடியாக சென்னை அல்லது ஹைதராபாதில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மே மாதம் 1 ஆம் தேதி அஜித் பிறந்தநாளுக்கு விடாமுயற்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நிச்சயம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேசமயம் அஜித்தின் பேச்சைக் கேட்டு விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து அப்டேட் கேட்காமல் ரசிகர்கள் அமைதியாக இருந்தனர். தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் நூதனமான முறையில் ”டைட்டில் வெளியாகி 300 நாளாச்சு அப்டேட் என்னாச்சு “ என்று இண்டெர்நெட் பதாகை ஏந்தி ரசிகர்கள் போராட்டத்தையும் தொடங்கியுள்ளார்கள்.
ஏறும் அஜித்தின் மார்கெட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் குமார் விடாமுயற்சி படத்திற்கு 105 கோடி சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அரசியலுக்கு வருவதால் நடிகர் விஜய் நடிப்பை கைவிட இருக்கும் நிலையில் அஜித்தின் சம்பளம் இன்னும் பலமடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அடுத்தபடியாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்திற்கு 150 கோடி வரை சம்பளம் வாங்கலாம் என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது. இப்படியான நிலையில் 10 வருடங்களுக்கு முன்பாக அஜித் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு அஜித் நடித்து வெளியான ஆரம்பரம் படத்தில் அஜித்குமார் 18 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 10 ஆண்டுகளில் அஜித்தின் சம்பளம் 87 கோடி அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க : Manjummel Boys Review: குணா குகையில் நடந்த உண்மை சம்பவம்.. மஞ்சும்மல் பாய்ஸ் பட விமர்சனம்!