AjithKumar: மீண்டும் காதல் மன்னனாக அஜித்! பேரழகியாக த்ரிஷா! விடாமுயற்சி போஸ்டரால் ரசிகர்கள் படுகுஷி!
விடாமுயற்சி படத்தின் முதல் இரண்டு போஸ்டர்கள் ரசிகர்களுக்கு முழு திருப்தி தராத சூழலில், அஜித் - த்ரிஷாவின் புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். துணிவு பட வெற்றிக்கு பிறகு அவர் நடிப்பில் விடாமுயற்சி படம் உருவாகியுள்ளது. கடந்த ஓராண்டுக்கு மேலாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வந்த நிலையில், படத்தைப் பற்றிய எந்த தகவலும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
திருப்திதராத முதல் இரண்டு போஸ்டர்கள்:
படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு, நீண்ட நாட்களாக படப்பிடிப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளியாகாத நிலையில் படப்பிடிப்பு தொடர்பான எந்த போட்டோவும் வெளியாகாமலே இருந்தது. இதையடுத்து, விடாமுயற்சி படத்தில் அஜித்குமாரின் போஸ்டர் மட்டும் வெளியாகியது.
ஒரு பிரம்மாண்ட நடிகரின் படத்தின் போஸ்டரை போல இல்லாமல், மிகவும் எளிமையாக அஜித்குமார் பாலைவனத்தின் நடுவில் உள்ள சாலையில் பையுடன் நடந்து வருவது போலவும், அடுத்து வந்த போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் நெஞ்சில் கை வைத்தது போல அஜித் நடந்து செல்வது போலவும் போஸ்டர் வெளியானது.
காதல் மன்னனாக மீண்டும் அஜித்:
இரண்டு போஸ்டர்களுமே அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் படி இல்லாமல் மிக எளிமையாக இருந்தது. இது விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்று விடாமுயற்சி படத்தின் அப்டேட் வருகிறது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.
இதையடுத்து, அஜித் – த்ரிஷா ஜோடியாக இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது, மிக இளமையான தோற்றத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு கருப்பு முடியுடன் அஜித் காட்சி தருகிறார். அவருடன் அவரது மனைவியாக த்ரிஷா அமர்ந்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்த அஜித் ரசிகர்கள் இருவரும் எவ்வளவு அழகாக உள்ளனர் என்று வர்ணித்து வருகிறார்கள்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
முதல் இரண்டு போஸ்டர்களில் திருப்தி அடையாத ரசிகர்கள் இந்த போஸ்டரினால் உற்சாகம் அடைந்துள்ளனர். கிரீடம், ஜீ படங்களில் இளம் காதலர்களாக நடித்திருந்த அஜித் – த்ரிஷா மீண்டும் அதே இளமையுடன் பார்ப்பது ரசிகர்கள் மத்தியில் அஜித் மற்றும் த்ரிஷா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள விடாமுயற்சி படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் அஜித், த்ரிஷா ஆகியோருடன் சஞ்சய் தத், அர்ஜூன், ஆரவ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.