Adi Purush : பிரபாஸின் ஆதிபுருஷ் படத்திற்கு வலுக்கும் கண்டனம்: காரணம் என்ன?
ஹிந்து மதத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் ஆதிபுருஷ் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் - விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர்
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆதிபுருஷ் படத்தின் டீசர், கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து அந்த டீசரை கண்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ராமர், லட்சுமணன், ராவணன் ஆகிய கதாப்பாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளனர் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆதிபுருஷ் படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளரான, அஜய் ஷ்ரமா , செய்தியாளர்களை சந்தித்த போது, “ ஸ்ரீ ராமர், லட்சுமணன் மற்றும் ராவணன் ஆகிய கதாப்பாத்திரங்களை தவறாக சித்தரித்துள்ளனர். இது ஹிந்து மதத்தை அவமானபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
View this post on Instagram
ஹிந்து சமூகத்தின் நம்பிக்கைகள் கேலி செய்யப்பட்டுள்ளது. இப்படமானது பெரிய பட்ஜெட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது. அதுவும், இதில் பாகுபலி புகழ் பிரபாஸ், ராமர் வேடத்தில் நடித்துள்ளார். அடுத்த ஆண்டு இப்படமானது ரீலஸாகவுள்ளது. இதில் சித்தரிக்கப்பட்டுள்ள ராவணனின் கதாப்பாத்திரத்திற்கும், புராண இதிகாசத்தில் உள்ள கதாப்பாத்திரத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இப்படத்தை நாங்கள் கண்டிக்கிறோம். ஆதிபுருஷ் படத்தை திரையரங்குகளில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.” என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், “மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் மீது அதிருப்தி. அந்த வாரியம் தன்னிச்சையாகவும் பொறுப்பற்ற முறையிலும் செயல்படுகிறது. மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தனது பணிகளைச் செய்ய முடியாவிட்டால், அதை அரசு கலைக்க வேண்டும்." என்று கண்டனம் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக், இப்படம் இந்துக்களின் உணர்வுகளைத் தாக்கியதாகக் கூறினார். மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, இந்து மதத்தின் கடவுள்களை தவறான வழியில் காட்டும் காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
மேலும் படிக்க : Harish Kalyan: இவங்கதான் என்னோட மனைவி.. போட்டோவுடன் திருமண அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்!