மேலும் அறிய

Harish Kalyan: இவங்கதான் என்னோட மனைவி.. போட்டோவுடன் திருமண அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாணுக்கு டும் டும் டும்!

‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக பிக்பாஸ் சீசன் 1 லும் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் கவனம் ஈர்த்தார்.

பிரபல நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 

ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிரஷ்டம் எனக்கு கிடைத்தது.

என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதுபோலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளை பதிக்க உதவியவர்கள், ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.

View this post on Instagram
 
A post shared by Harish Kalyan (@iamharishkalyan)

இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் துவங்க உள்ள முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள்  குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், அன்பான ரசிகர்கள், ஊடகங்கள்/பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார். 

முன்னதாக இன்று காலையில் தனது வாழ்க்கை துணையோடு கைகோர்த்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு  “புதிய மங்களகரமான தொடக்கம்” என்று ஹரிஷ் கல்யாண் பதிவிட்டிருந்தார். திரையுலகைப் பொறுத்தவரை தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஹரிஷ் கல்யாணும் ஒருவர். தற்போது இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் அதில் கிடைத்த பிரபலத்தின் வாயிலாக பிக்பாஸ் சீசன் 1 லும் போட்டியாளராக கலந்து கொண்டு அங்கும் கவனம் ஈர்த்தார். அதனைத்தொடர்ந்து இவர் நடித்த ‘ப்யார் ப்ரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’  ‘தாராள பிரபு’ உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து ப்ரியா பவானி சங்கருடன் அவர் நடித்த  ‘ஓ மன பெண்ணே’ படத்தில் நடித்தார். இந்தப்படத்தின் போது நெருங்கிய பழகியதாக தகவல்கள் வெளியாகியது. 

தொடர்ந்து  ஜி.வி. பிரகாஷை வைத்து  ‘அடங்காதே’ படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமி இயக்கத்தில்  ‘டீசல்’ மற்றும் ஸ்டார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘டீசல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
Embed widget