VTK OTT Release Date: ஓடிடியில் வருகிறது வெந்து தணிந்தது காடு.. எப்போது எங்கு ரிலீஸ் தெரியுமா? - வெளியானது அறிவிப்பு!
Vendhu Thanindhadhu Kaadu OTT Release: ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Vendhu Thanindhadhu Kaadu OTT Release: ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வரும் அக்டோபர் 13 ஆம் நாள் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமேசான் ப்ரைம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
take an unvarnished look at the gangster world #VendhuThanindhathuKaaduOnPrime, Oct 13 pic.twitter.com/kixtugRSqV
— prime video IN (@PrimeVideoIN) October 11, 2022
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களுக்குப் பின் சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3 வது முறையாக இணைந்துள்ள படம் “வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுக நடிகை சித்தி இதானி நடித்துள்ளார். நடிகை ராதிகா, மலையாள நடிகர் சித்திக், அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
View this post on Instagram
விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றிய நிலையில், செப்டம்பர் 15ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான படம், கலவையான விமர்சனங்களை முதல் சில நாள்களில் பெற்றாலும், அதன் வசூல் தொடர்ந்து நிதானமான பாதையில் பயணித்து தற்போது வெற்றிப் படமாக அமைந்துள்ளது.
குறிப்பாக படத்தில் சிலம்பரசனின் நடிப்பும், ஏ.ஆர்.ஆரின் இசையும் பெரிதளவில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. முன்னதாக படம் குறித்து வெளியான அதிகாரப்பூர்வ வசூல் தொடர்பான அறிவிப்பின்படி, படம் வெளியாகி 4 நாள்களில் 50. 55 கோடி ரூபாயை படம் வசூலித்ததாகக் தெரிவிக்கப்பட்டது.
Producers Ishari Ganesh gifts #STR with a brand new car & director #GVM with his favourite bullet bike at #VendhuThanidhathuKaadu success meet this evening. #VTK pic.twitter.com/rauEnhsirp
— Venkatramanan (@VenkatRamanan_) September 24, 2022
இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 92 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Toyota VellFire காரை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தை இயக்கிய இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு ராயல் என்ஃபீல்டு பைக் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.