Vanitha Vijayakumar: நீங்கள் வனிதாவின் மகனா? - நெட்டிசன் கேள்விக்கு ஷாக் பதில் கொடுத்த விஜய் ஸ்ரீஹரி!
ரசிகரின் கேள்விக்கு வனிதாவின் மகன் ஷாக் விஜய் ஸ்ரீ ஹரி பதிலை அளித்துள்ளார்
வனிதா
தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் விஜயகுமார். இவரது மகள் நடிகை வனிதா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கினார். பிக்பாஸ் மட்டுமின்றி அவர் 3வதாக பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டதும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், அந்த திருமணமும் முறிந்தது.
வனிதா, 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அந்த திருமண பந்தத்தில் வனிதாவிற்கு ஒரு மகள் மற்றும் மகன் பிறந்தார்கள். அப்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததால் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். அதன்படி மகனை கணவர் ஆகாஷிடம் செல்ல வேண்டுமென்று நீதிமன்றம் கூறியது. அடுத்தடுத்து நாட்கள் ஓடியது.
View this post on Instagram
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர் தற்போது 2கே காதல், காத்து, அநீதி, அந்தகன், ரஜினி, பிக்கப் டிராப் என பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுமட்டுமின்றி, வனிதா அவரது பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதுதவிர, அழகு சாதனப் பொருட்கள் மீது ஆர்வம் கொண்ட வனிதா அழகுசாதன பொருட்கள் விற்பனை அங்காடி ஒன்றையும் கடந்தாண்டு தொடங்கினார்.
ஆக்டீவ்..
View this post on Instagram
சோஷியல் மீடியாவில் ஆக்டீவாக இருக்கும் வனிதா அவ்வப்போது குடும்ப நிகழ்ச்சிகள், படப்பிடிப்பு தகவல்களை பகிர்ந்து வருவார். இந்நிலையில் தன்னுடைய மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கூறி பதிவிட்டிருந்தார் வனிதா.அதில் ஒருவர் வனிதாவின் மகனை டேக் செய்து நீங்கள் வனிதாவின் மகனா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த வனிதா மகன், 'நான் ஆகாஷின் மகன் என பதிலளித்தார். வனிதா மீதான கோபத்தைத்தான் மகன் இவ்வாறாக வெளிப்படுத்தியதாக பலரும்பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில் குடும்ப விவகாரங்களில் அதிகம் தலையிட தேவையில்லை எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்