உஷாரு குமாரு! வனிதாவுடன் நெருக்கமான பவர் ஸ்டார்: பங்கமாய் ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள்!
பவர் ஸ்டாருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை போஸ்ட் செய்த வனிதாவை படு பங்கமாக கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள்

அதிரடி ராணி வனிதா விஜயகுமார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அவரின் லெவலே மாறிவிட்டது. விஜய் ஜோடியாக 1995ம் ஆண்டு வெளியான 'சந்திரலேகா' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். பல ஆண்டுகள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த வனிதா விஜயகுமார் தற்போது நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் 'அந்தகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார் வனிதா விஜயகுமார். ஆனால் அப்படம் பாதியிலேயே ட்ராப்பாகி விட்டது. சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் தீவிர சிகிச்சை பெற்று வந்த பவர் ஸ்டார் படத்தில் நடிக்க முடியாததால் அப்படம் நிறுத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வெளியான 'லத்திகா' படத்தை தயாரித்து, இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தார். அதற்கு பிறகு நடிகர் சந்தானத்துடன் இணைந்து 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவையும் பெற்றார்.
அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இயக்குனர் ஷங்கரின் 'ஐ' திரைப்படத்திலும் நடித்திருந்தார் பவர் ஸ்டார். அதை தொடர்ந்து உருவாகி வந்த திரைப்படம் தான் பிக்கப் ட்ராப். உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு தற்போது பவர் ஸ்டார் ஆளே அடையாளம் தெரியாதவர் போல வேற மாதிரி மாறிவிட்டார். நடிகை வனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவர் ஸ்டாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். வனிதாவின் இந்த போஸ்ட் தற்போது கடும் ட்ரோல்களை எதிர்கொண்டு வருகிறது.
பவர் ஸ்டாரை கொஞ்சுவது போல வனிதா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். வாயை குவித்து வனிதா போட்ட இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாவம் அவரை விட்டு விடுங்க என நெட்டிசன்கள் ட்ரோல்கள் மூலம் சரமாரியாக கலாய்த்து வருகிறார்கள். வனிதாவுடன் நெருக்கமாக பவர் ஸ்டார் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பேசுபொருளாக ட்ரெண்டிங்காகி வருகிறது. அதிர்ச்சியில் இருக்கும் ரசிகர்களோ இது என்ன கொடும டா சாமி என நொந்து வருகிறார்கள். வனிதா யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் பவர் ஸ்டார் உடன் ஒரு நேர்காணலை வெளியிடுவதற்காக தான் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இவை.
ஏற்கனவே வனிதா விஜயகுமார் மற்றும் பவர் ஸ்டார் இருவரும் மாலை மாற்றி கொள்வது போன்ற புகைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்த நெருக்கமான புகைப்படம் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.





















