Ajithkumar: எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு.. நேர்கொண்ட பார்வைக்கு அஜித் கொடுத்த விளக்கம்.. மனம் திறந்த வினோத்!
வலிமை படம் குறித்து ஹெச். வினோத் சினிமா எக்ஸ்ஃப்ரஸ் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் வலிமை படம் மட்டுமல்லாது பல விஷயங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
ஹெச்.வினோத் பகிர்ந்த விஷயங்கள்..
நிறைய உற்சாகத்தோடுதான் இந்தப் பயணத்தை தொடங்கினோம். ஆனால் கொரோனா பரவல் இந்தப் பயணத்தை இரண்டு மடங்கு கடினமாக்கி விட்டது. கடைசியாக எல்லோருக்கும் பிடித்தமான படமாக இதனை உருவாக்கியிருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் இரண்டு பிரச்னைகளை பற்றி பேசியிருக்கிறோம். இந்தப் பிரச்னைகள் வரும் காலத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என நான் நினைக்கிறேன். ஐரோப்பாவில் தொடங்கப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் கிளப்பை மையப்படுத்திதான் படம் எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதில் உண்மை இல்லை.
நேர்கொண்ட பார்வை படத்தை பொருத்தவரை அது அனைத்துதரப்பு மக்களுக்கும் போய் சேருமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் அஜித் சாருக்கு அதில் பெரிய நம்பிக்கை இருந்தது. அவர் நினைத்தது சரிதான். காரணம் படம் வெளியான போது, சமூகத்தில் படம் உண்டாக்கிய தாக்கம் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.
நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி அஜித் ஒரு முறை, “ என்னுடைய மகள் இந்த சமூகத்தில்தான் வாழப் போகிறாள். இந்த சமூகத்தில் வாழும் ஒரு ஆண் மகன், ஒரு பெண்ணை எப்படி பார்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
ஒரு தந்தையாக, என் மகள் வளர்ந்த பிறகு நான் இப்படி ஒரு படத்தை செய்திருக்கிறேன் என்பதை காட்ட விரும்புகிறேன். இது எனக்கு புதிது. என்னுடைய படங்களில் பெரும்பாலும், வலிமையான பெண் கதாபாத்திரங்கள் இருந்ததில்லை. அதனால்தான் இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். ஒரு சமூகமாக நாம் உண்மையை பேசுவதற்கு பயப்படுகிறோம். “பொய்களால் இந்த சமூகம் கட்டமைக்கப்பட்டுயிருக்கு” என்று அவர் கூறினார்.
அடுத்த வலிமை அப்டேட்
முன்னதாக, போஸ்டர்கள், மோஷன் போஸ்டர், கிளிம்ஸ், மேக்கிங் வீடியோ உட்பட இரண்டு பாடல்களை வெளியிட்டிருக்கிறோம். அடுத்தக்கட்டமாக ட்ரெய்லரை வெளியிட இருக்கிறோம். அதனைத் தொடர்ந்து, 2 பாடல்களை வெளியிட இருக்கிறோம்.
View this post on Instagram