மேலும் அறிய

''தியேட்டர் ஃபேன்ஸ் கூட ஓடிடிக்கு வரணுமாம்..'' மனைவி கிருத்திகா குறித்து கலகலவென பேசிய உதயநிதி!

நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ள வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.

நடிகர் காளிதாஸ் ஜெயராம், நடிகை தான்யா ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ள வெப் சீரிஸ் பேப்பர் ராக்கெட். இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியானது. இதனை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.

இதில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:

கிருத்திகா இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறார். இதன் படப்பிடிப்பின்போது கிருத்திகாவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்காக கிருத்திகா மருத்துவமனை சென்றார். ஆனால் அவர் அம்மாவோ உனக்கு வேலை தான் முக்கியம். நான் சீக்கிரம் சரியாகி வீடு திரும்புவேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார். கிருத்திகாவும் சரி அவர் அம்மாவும் சரி துணிச்சலானவர்கள்.

அந்த துணிச்சல் கிருத்திகாவின் படைப்புகளில் பிரதிபலிக்கும். கிருத்திகா பேப்பர் ராக்கெட் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் துணிச்சலுடன் எழுதியிருக்கிறார். இந்த வெப் சீரிஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. ரிலீஸை நினைத்து கிருத்திகா டென்ஷனாக இருக்கிறார்.

'தியேட்டர் ஃபேன்ஸ் கூட ஓடிடிக்கு வரணுமாம்..'' மனைவி கிருத்திகா குறித்து கலகலவென பேசிய உதயநிதி!

அண்மையில் சந்தானம் அவரது குலுகுலு படத்தை எனக்கு திரையிட்டுக் காட்டினார். படத்தை ரிலீஸ் செய்துதருமாறு கேட்டார். நானும் சரியென்று சொன்னேன். இது பற்றி கிருத்திகாவிடம் பேசினேன். அப்போது அவர் டென்ஷனாகிவிட்டார். என் படமும் 28ஆம் தேதி தானே ரிலீஸாகிறது. நீ இன்னொரு நாள் ரிலீஸ் செய் என்றார். நான் திரையரங்குகளில் தானே ரிலீஸ் செய்கிறேன் என்றேன். ஆனாலும் அவருக்கு பதட்டம் குறையவில்லை. திரையரங்கும் செல்லும் ஆடியன்ஸ் கூட அன்றைய தினம் ஓடிடியில் அவர் வெப் சீரிஸ் காண வரவேண்டும் என்பதே கிருத்திகாவின் எதிர்பார்ப்பு.

இவ்வாறு உதயநிதி தெரிவித்தார்.

நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா கடந்த 2013 ஆம் ஆண்டு காதல் நகைச்சுவை திரைப்படமான வணக்கம் சென்னை படம் மூலம் இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். 

அந்தப் படத்தில் சிவா மற்றும் பிரியா ஆனந்த் நடித்திருப்பர். அவர்களுடன் சந்தானம், ராகுல் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் நடித்திருப்பர்.  அனிருத் ரவிச்சந்திரன் இசையமைப்பில் இந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் அடித்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இப்படம் வரவேற்பை பெற்றிருந்தது வணக்கம் சென்னை.

இதையடுத்து கிருத்திகா விஜய் ஆண்டனி நடித்த காளி படத்தை இயக்கினார். விஜய் ஆண்டனி கொள்ளைக்காரனாக  நடித்த இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான காளி படத்தை பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்திருந்தார். விஜய் ஆண்டனியே இசையமைத்திருந்தார்.
தற்போது இவர் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸ் மூலம் ஓடிடி தளத்திலும் அடியெடுத்து வைத்துள்ளார் கிருத்திகா உதயநிதி. 

இந்த வெப் சீரிஸில் காளிதாஸ் ஜெயராம், தானியா ரவிச்சந்திரன், கௌரி ஜி கிஷான், பூர்ணிமா பாக்கியராஜ், சின்னி ஜெயந்தி, கருணாகரன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது ஜீ 5 ஓடிடி தளத்தில் ஜூலை 28 அன்று திரையிடப்படும் என தெரிகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Republic Day 2026: குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
ABP Premium

வீடியோ

”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை
அதெப்படி திமிங்கலம்..! கால்வாய்க்கு கொசுவலை சென்னை மாநகராட்சி NEW IDEA
கேரளாவை உலுக்கிய தற்கொலை தலைமறைவான ஷிம்ஜிதா தேடுதல் வேட்டையில் போலீஸ்
அதிமுகவில் காளியம்மாள்? நாகை MLA சீட் டிக் அடித்த EPS
”MUSLIM மட்டுமா ஹிஜாப் போடுறோம்?வடமாநில பெண்களும் போடுறாங்க”பெண் கவுன்சிலர் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Whistle: இணையத்தில் ஒரே விசில் சத்தம்.. சிதறவிடும் தவெக - ஆர்ப்பரிக்கும் விஜய் ரசிகர்கள்!
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
Dmdk Premalatha : மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள் என்ன.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
மதில் மேல் பூனையாக தேமுதிக.! பிரேமலதா கேட்ட தொகுதிகள்.? கப் சிப் ஆன திமுக, அதிமுக
Republic Day 2026: குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
குடியரசு தினத்தில் எதிரி நாட்டு தலைவர்: இந்தியாவின் அழைப்பும், ஆட்சி கவிழ்ப்பு சதியும் - மறக்க முடியாத சம்பவம்
iPhone 15 Price Drop India: வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.! ஐபோன் 15-க்கு இவ்ளோ தள்ளுபடியா.? அத எப்படி வாங்குறதுன்னு பாருங்க
வாய்ப்ப மிஸ் பண்ணிடாதீங்க.! ஐபோன் 15-க்கு இவ்ளோ தள்ளுபடியா.? அத எப்படி வாங்குறதுன்னு பாருங்க
Tata Punch 5 Star Rating: அப்படி போடு.! ரூ.5.59 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்குடன் டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்; வாங்குறதுக்கு கசக்குமா.?!
அப்படி போடு.! ரூ.5.59 லட்சத்தில் 5 ஸ்டார் ரேட்டிங்குடன் டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்; வாங்குறதுக்கு கசக்குமா.?!
Ola Electric in Trouble: நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்; ரூ.9,000 கோடி சந்தை மூலதனம் சரிவு; என்ன ஆச்சு.?
நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்; ரூ.9,000 கோடி சந்தை மூலதனம் சரிவு; என்ன ஆச்சு.?
Hotspot2Much Review : ஹாட்ஸ்ப்டார் 2 திரைப்படம் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ
Hotspot2Much Review : ஹாட்ஸ்ப்டார் 2 திரைப்படம் எப்படி இருக்கு...விமர்சனம் இதோ
Embed widget