HBD Udhayanidhi Stalin : சினிமா மீது தீராத காதல் கொண்ட அரசியல் வாரிசு... மக்கள் அன்பன் உதயநிதிக்கு பிறந்தநாள்!
மக்கள் அன்பன் என அழைக்கப்படும் சின்ன தளபதி உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாள் இன்று. தமிழகமே இந்த நாளை திருவிழா போல கொண்டாடி வருகிறது.
தமிழ்நாட்டின் மிக முக்கியமான பிரமுகரின் வாரிசாக இருப்பினும் மிகவும் எளிமையான ஒரு மனிதராக நமக்கு மத்தியில் வாழும் கலகத் தலைவன் உதயநிதி ஸ்டாலின். இந்த தமிழ் மகனுக்கு இன்று 45 வது பிறந்தநாள்.
அரசியல் வாரிசுவின் சினிமா பிரவேசம் :
அரசியல் போர்வைக்குள் நுழையாமல் தனக்கு நெருக்கமான வட்டத்தில் மட்டுமே தொடர்பை வைத்து கொண்டு தமிழ் மக்களுக்கு ஒரு தயரிப்பாளராக முகம் காட்டியவர் உதயநிதி ஸ்டாலின். "ரெட் ஜெயிண்ட் மூவிஸ்" நிறுவனத்தின் மூலம் இன்று தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் திகழும் உதயநிதி முதலில் தயாரித்த திரைப்படம் 2009ம் ஆண்டு வெளியான 'குருவி' திரைப்படம். அதனை தொடர்ந்து பல திரைப்படங்களை தயாரித்தவருக்கு நடிப்பு மீதும் காதல் வர 2012ம் ஆண்டு வெளியான "ஒரு கல் ஒரு கண்ணாடி" திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானர். அரசியல் குடும்பத்தை சேர்ந்தவராக இருப்பினும் ஒரு சாதாரண ரொமான்டிக் ஹீரோவாக டூயட் பாடினாலும் சமூக அக்கறை என்பது அவரது ரத்தத்தில் ஊறிய ஒன்றல்லவா. அதனை எடுத்துரைக்கும் வகையில் சமூக பிரச்சனைகளை அலசும் திரைப்படங்களான கண்ணே கலைமானே, மனிதன், நெஞ்சுக்கு நீதி போன்ற திரைப்படங்களிலும் சிறப்பாக நடித்து இருந்தார். சமூகத்தை சீர்திருத்தும் இவரின் சினிமா ஸ்டைலே அவரின் அரசியல் பயணத்தின் தொடக்கமாக இருந்தது.
தமிழகத்தின் நம்பிக்கையாய், இளைஞர்களின் எழுச்சியாய் வலம்வரும் எங்கள் இளைய சூரியன். சின்னவர் #UdhayanidhiStalin அவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்....!#HBDUdhay #HBDUdhayAnna #HBDUdhayanidhiStalin pic.twitter.com/Hde9x9JbMz
— டெல்டா திராவிடன் (@deltadravidan) November 26, 2022
சமூக அக்கறை கொண்ட படங்கள் :
சினிமாவில் மட்டும் பயணிக்காமல் 2019ம் ஆண்டு அரசியலிலும் பிரவேசம் செய்தார். அனல் பறக்கும் பிரச்சாரம் மூலம் தனது ஆளுமையை நிரூபித்து இளைஞர் அணி செயலாளராக பதவியேற்றார். சினிமா துறையில் மின்னும் நட்சத்திரம் மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட அனல் பறக்கும் சூரியனாகவும் தன்னை வெளிப்படுத்தினார். முதல்முறையாக 2021ம் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி வாகை சூடி இளம் தலைவராக பதவியேற்றார்.
#leadership #DMK #UdhayanidhiStalin #Kalaignar #MKStalin #Udhayanna #periyarism pic.twitter.com/Kgy66VAJNK
— சுப்பு சரவணன் (@CaravananCuppu) November 26, 2022
இளம் திராவிட தலைவன் :
அரசியலில் ஒரு முக்கியமான பொறுப்பில் இருப்பினும் சினிமா துறையின் மீது அவருக்கு இருக்கும் ஈர்ப்பு இன்றும் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கலகத் தலைவன், நெஞ்சுக்கு நீதி, சைக்கோ போன்ற படங்களிலும் நடித்து வந்தார். அடுத்தடுத்து பல திரைப்படங்களை தனது 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனத்தின் மூலம் வெளியிட்டு வருகிறார். அரசியல் சினிமா என இரண்டையும் சரிசமமாக பேலன்ஸ் செய்து வரும் உதயநிதி ஸ்டாலின் தனது படங்களின் மூலம் சமூக அக்கறையை மக்களுக்கு கொண்டு செல்ல விரும்பும் ஒரு இளம் திராவிட தலைவன்.
ஒன்ஸ் மோர் ஹேப்பி பர்த்டே உதயநிதி!!!