TTF Vasan: விபத்துக்குள்ளான டி.டி.எஃப் வாசன் கார்.. வழக்குப்பதிவு செய்த காவல்துறை
TTF Vasan: பிரபல யூடூபர் டி.டி.எஃப். வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
TTF Vasan: பிரபல யூடூபர் டி.டி.எஃப். வாசன் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் மீது காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
பைக் பயணங்களை மைய்யமாகக் கொண்ட யூட்டூப் சேனல் நடத்தி டீன் ஏஜ் இளசுகளிடம் தனி வரவேற்பைப் பெற்றவர் டி.டி.எஃப். வாசன்.ன் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கும் இவர், தற்போது சென்னை, அமைந்தகரை பகுதில் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவரது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால், சென்னை அண்ணாநகர் காவல் துறையினர் டி.டி.எஃப். வாசன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இவரது பிறந்த நாளை முன்னிட்டு மஞ்சள் வீரன் என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டது. இப்படத்தில் டி.டி.எஃப். வாசன் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படத்தை இயக்குநர் செல்அம் இயக்குகிறார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேன்ஸ் மீட் என்கிற பெயரில் இரு சக்கர வாகனத்தில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி போலீசார் பல்வேறு இடங்களில் அவரை பிடித்து வைத்துக்கொண்டு கூட்டம் கலைந்து சென்ற பின்பு சம்பவங்கள் எல்லாம் நடைபெற்று வருகிறது குறிப்பாக பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் அதிக வேகத்துடன் பயங்கர சத்தத்துடன் வாகனங்களை இயக்குவதாகவும் இவரின் வருகையால் சிறுவர்கள் இளைஞர்கள் அதிகளவில் அவரை காண கூடுவதாகவும் இதனால் பொது போக்குவரத்து பாதிப்புடன் பொதுமக்களுக்கும் பாதிப்பு அதிக அளவில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து அதற்கு காவல் துறை தரப்பில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று நுங்கம்பாக்கம் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அவரது நண்பர்கள் காரில் வந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக முன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரின் முன்பக்கம் சேதமடைந்தது.
உடனடியாக டி.டி.எப் வாசன் மற்றும் அவருடன் பயணித்த நண்பர்கள் காரை விட்டு இறங்கி ஆட்டோ பிடித்து கிளம்பி சென்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விபத்து சம்பவம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் யாரும் காவல் நிலையத்திற்கு வந்து புகார் தரவில்லை எனவும் புகார் கொடுக்கும் பட்சத்தில் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைந்தகரை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். காரை டி.டி.எப் வாசன் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினரா அல்லது உடன் வந்த நபர்கள் ஓட்டினரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக சர்ச்சைகளில் சிக்கி வரும் டிடி எப் வாசன் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பார்களா இளைஞர்கள் இதுபோன்ற இரு சக்கர வாகன சாகசத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது