IPL Movie Review : டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமான ஐபிஎல் படம் எப்படி இருக்கு ? விமர்சனம் இதோ
IPL Movie Review : யூடியுப் பிரபலமான டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமாகும் ஐபிஎல் படத்தின் முழு விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்

கருணாநிதி இயக்கத்தில் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம் ஐபிஎல். கிஷோர் , போஸ் வெங்கட் , அபிராமி , சிங்கம்புலி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள் . அஸ்வின் விநாயகமூர்த்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த நவம்பர் 28 ஆம் தேதி திரையரங்கில் வெளியான ஐபிஎல் படத்தின் விமர்சனத்தை இங்கு பார்க்கலாம்
ஐபிஎல் திரைப்பட விமர்சனம்
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிஷோர் தனது மகள் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். ஒரு சிறிய பிரச்சனையில் அவரது வேலை போய்விட சொந்தமாக கார் வாங்கி டாக்ஸி ஓட்டி வருகிறார். மறுபக்கம் போலீஸான போஸ் வெங்கட் விசாரணையில் ஒரு குற்றவாளியை அடித்து கொன்றுவிடுகிறார். இந்த கொலை பழியை கிஷோர் மீது செலுத்து அவரை சிக்கவைக்க திட்டமிடுகிறார். நாயகனான டிடிஎஃப் வாசன் ஃபுட் டெலிவரி பாயாக வருகிறார். கிஷோரின் தங்களை மகளை காதலித்து வருகிறார் அவர். இந்த பிரச்சனையில் இருந்து கிஷோரை நாயகன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே ஐபிஎல் படத்தின் கதை
டிடிஎஃப் வாசன் நாயகனாக அறிமுகமானாலும் இப்படத்தில் அவரது நடிப்பை வெளிப்படுத்த போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை. கதையும் பெரும்பாலான காட்சிகள் கிஷோரை மையப்படுத்தி அமைந்திருப்பதால் பார்வையாளரிடம் அவரே கவனமீர்க்கிறார். அதற்கேற்றார் போல் கதாபாத்திரத்தை தனது நடிப்பால் நம்பகத் தன்மையோடு கிஷோர் கொண்டுவருகிறார். கிஷோரின் மனைவியாக வரும் அபிராமி , சிங்கம் புலி , போஸ்வெங்க ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள். அஸ்வின் விநாயகமூர்த்தி பாடல்களை சிறப்பாக வழங்கியுள்ளார் என்றாலும் பின்னணி இசையில் கவனம் செலுத்தியிருக்கலாம்.






















