மேலும் அறிய

Cinema Headlines: மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா! விஷாலுக்கு வந்த அரசியல் அழைப்பு - சினிமா ரவுண்ட் அப்

Cinema Headlines November 24: சினிமா உலகில் இன்று இதுவரை நடந்த முக்கியச் செய்திகளை கீழே காணலாம்.

Trisha Forgave Mansoor Ali Khan: தவறு செய்வது மனித இயல்பு ...மன்சூர் அலிகானை மன்னித்த த்ரிஷா..எக்ஸ் தளத்தில் அவரே போட்ட ட்வீட் ...

  • மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து பேசியது சர்ச்சையான நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் வலுத்தன. இந்நிலையில் மன்சூர் அலிகான் மீது  நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்தனர். இன்று, த்ரிஷாவே என்னை மன்னித்து விடு என மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து நடிகை த்ரிஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு என பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க

Vichithra husband : விசித்திரா கொடுத்த ஷாக்... மூத்த மகன் எடுத்த அதிரடி முடிவு... மனவேதனையில் விசித்திரா கணவர்

  • பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் விசித்திரா, தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசுகையில் தனக்கு ஹீரோ ஒருவர் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்தும், ஸ்டாண்ட் கலைஞர் ஒருவரின் தவறான அணுகுமுறை குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த விஷயம் மீடியா வரையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பற்றியும் விசித்திராவுக்கு எந்த ஒரு நியாயமும் கிடைக்காதது பற்றியும் பேசி இருந்தார். விசித்திராவின் கணவர் மற்றும் மகன்கள் விசித்திராவின் இந்த செயல் குறித்து மனவேதனையில் இருக்கிறார்கள். சமீபத்தில் விசித்திராவின் கணவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசுகையில் "அந்த கசப்பான அனுபவத்தை நாங்கள் மறக்க வேண்டும் என நினைத்த வேளையில் இதை ஏன் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொன்னார் என தெரியவில்லை. அந்த எபிசோடை பார்த்த போது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கும் எங்களுடைய மூத்த மகன் கல்லூரி கூட செல்லாமல் இருக்கிறான். அவனை சமாதானம் செய்து தான் அனுப்ப வேண்டும்" என கூறி இருந்தார் விசித்திராவின் கணவர். மேலும் படிக்க

Actor Vishal: பா.ஜ.க., தி.மு.க.வில் இருந்து வந்த அழைப்பு! சேர மறுத்த விஷால் - காரணத்தை சொன்ன அவர் அப்பா!

  • நேர்காணல் ஒன்றில் பங்கேற்று பேசிய ஜி.கே.ரெட்டி, “விஷால் ரொம்ப துணிச்சல் நிறைந்தவன். அதனால் தான் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றான். விஷாலுக்கு பாஜகவில் இருந்தும், திமுகவில் இருந்தும் அழைப்பு வந்துள்ளது. கையில் நல்ல தொழில் இருக்கிறது. கடவுள் ஆசீர்வாதம் இருக்கிறது. அதை விட்டுட்டு ஏன் அரசியலுக்கு செல்ல வேண்டும் என மறுத்து விட்டான். இப்போது துப்பாறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறான். அவனுக்கு நான் முழு சப்போர்ட் கொடுக்கிறேன். எப்படி நடிப்புல ஜெயிச்சானோ அதே மாதிரி இயக்குநராகவும் வெற்றி பெறுவான். நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட நிலையில், என் ஆசையை நிறைவேற்றி அதுல ஜெயிச்சும் காமிச்சிட்டான். அந்த வெற்றியில நான் என்னையே பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

Ajithkumar at Chennai Airport: ஸ்டைலாக சென்னை வந்திறங்கிய அஜித்! திடீர் வருகைக்கு என்ன காரணம்? வைரலாகும் வீடியோ

  • விடாமுயற்சி படக்குழுவினர் தீபாவளிக்கு கூட ஊர் திரும்பாமல் 'விடாமுயற்சி' படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். தற்போது நடிகர் அஜித்குமார் அவசரமாக சென்னை திரும்பியுள்ளார். அவர் அஜர்பைஜான் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையத்தில் மிகவும் கெத்தாக வந்து இறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு ட்ரெண்டிங்காகி வருகிறது.  இந்த திடீர் வருகைக்கு என்ன காரணமாக இருக்கும் என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் படிக்க

Dhruva Natchathiram: ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கௌதம் மேனன்.. துருவ நட்சத்திரம் படத்தை விடாமல் துரத்தும் பிரச்சினை..

  • துருவ நட்சத்திரம் படம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள இயக்குநர் கௌதம் மேனன், “மன்னிக்கவும். துருவ நட்சத்திரம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் இன்னும் ஓரிரு நாட்கள் தேவை என்று தெரிகிறது. உலகெங்கிலும் உள்ள எல்லா இடங்களிலும் முன்பதிவுகள் மற்றும் சரியான தியேட்டர்கள் மூலம் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை அளிப்போம் என நம்புகிறோம். படத்துக்கான ஆதரவு மனதைக் கவரும் வகையில் இருக்கிறது, மேலும் எங்களைத் தொடர வைத்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் வருவோம்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget