Vichithra husband : விசித்திரா கொடுத்த ஷாக்... மூத்த மகன் எடுத்த அதிரடி முடிவு... மனவேதனையில் விசித்திரா கணவர்
Vichithra Husband : மறக்க நினைத்த விஷயம் பற்றி விசித்திரா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூகம்பம் டாஸ்கில் பேசியது குறித்து மிகுந்த மனவேதனையில் இருக்கிறார் விசித்திராவின் கணவர்.

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய நிலையில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்க பின்னர் 5 பேர் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்பட பவா செல்லதுரை உடல்நிலை காரணமாகவும், பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். தற்போது 14 போட்டியாளர்களுடன் தொடர்ந்து வரும் இந்த நிலையில் ஞாயிற்றுகிழமை எபிசோடில் யார் வெளியேற போவது என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிரதீப் ஆண்டனி, ஜோவிகா, மாயா, பூர்ணிமா உள்ளிட்டோர் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாள் முதல் எக்கச்சக்கமான கன்டென்ட் கொடுத்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார்கள். ஜோவிகாவை டாமினேட் செய்யும் அளவுக்கு மாயா, பூர்ணிமா, பிரதீப் கன்டன்ட் கொடுத்து வர பிரதீப் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றபட்டர்.
டஃப் கொடுக்கும் விசித்திரா :
அதற்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி கொஞ்சம் கலை இழந்து விடும் என எதிர்பார்த்தால் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுத்த அர்ச்சனாவும், தினேஷும் சரியான டஃப் கொடுக்க விசித்திராவும் ஒவ்வொரு நாளும் பட்டையை கிளப்பி வருகிறார். கடந்த சில வாரங்களாக செம்மையாக விளையாடி சக போட்டியாளர்களுக்கு சரியான நெருக்கடி கொடுத்து வருகிறார்.
பூகம்பம் டாஸ்க் :
அந்த வகையில் இந்த வாரம் பூகம்பம் டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பூகம்பம் தந்த தருணங்களை பற்றி பேச வேண்டும் என கூறப்பட்டது. விசித்திரா தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து பேசுகையில் தனக்கு ஹீரோ ஒருவர் கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்தும், ஸ்டாண்ட் கலைஞர் ஒருவரின் தவறான அணுகுமுறை குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். அந்த காலகட்டத்தில் இந்த விஷயம் மீடியா வரையில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது பற்றியும் விசித்திராவுக்கு எந்த ஒரு நியாயமும் கிடைக்காதது பற்றியும் பேசி இருந்தார்.
கமல்ஹாசன் கருத்து என்ன?
விசித்திரா குறிப்பிட்டு பேசிய நடிகர் பலேவடி பாசு படத்தில் நடித்த பாலகிருஷ்ணா எனவும் முறைகேடாக நடந்து கொண்ட ஸ்டாண்ட் கலைஞர் பெயர் விஜய் என்றும் இணையத்தில் தகவல் பரவி வருகிறது. விசித்திராவுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவம் இணையத்தில் கடந்த ஒரு வார காலமாக ஒரு பேசுபொருளாக மாறியுள்ள சூழலில் இது குறித்து உலகநாயகன் கமல்ஹாசன் சனி, ஞாயிறு எபிசோடில் என்ன சொல்ல போகிறார் என்பதை பார்ப்பதற்காக மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் ரசிகர்கள்.
மனவேதனையில் விசித்திரா கணவர் :
இந்த நிலையில் விசித்திராவின் கணவர் மற்றும் மகன்கள் விசித்திராவின் இந்த செயல் குறித்து மனவேதனையில் இருக்கிறார்கள். சமீபத்தில் விசித்திராவின் கணவர் கலந்துகொண்ட நேர்காணல் ஒன்றில் பேசுகையில் "அந்த கசப்பான அனுபவத்தை நாங்கள் மறக்க வேண்டும் என நினைத்த வேளையில் இதை ஏன் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொன்னார் என தெரியவில்லை. அந்த எபிசோடை பார்த்தபோது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. இதனால் மிகுந்த மனவேதனையில் இருக்கும் எங்களுடைய மூத்த மகன் கல்லூரி கூட செல்லாமல் இருக்கிறான். அவனை சமாதானம் செய்துதான் அனுப்ப வேண்டும்" என கூறி இருந்தார்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

