2020ல் ரசிகர்களை தன்பக்கம் இழுத்த டாப் 10 சின்னத்திரை நடிகர்கள்!
டாப்10 சின்னத்திரை ஹீரோக்கள் பட்டியலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
சின்னத்திரையில் இருந்தாலும் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கும் நபர்கள் ஏராளம். தொகுப்பாளர், சீரியல், ரியாலிட்டி நிகழ்ச்சி என ரசிகர்களோடு அவர்கள் பல வழிகளில் இணைந்திருப்பார்கள். அதன்படி கடந்த ஆண்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்த டாப்10 சின்னத்திரை ஹீரோக்கள் பட்டியலை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சென்னை டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்தமானவர்கள் உண்டா? பாருங்கள்.
1.அஸ்வின் குமார்:
2015ம் ஆண்டே ரெட்டை வால் குருவி சீரியல் மூலம் திரையில் தோன்றினாலும் குக் வித் கோமாளி மூலமே பலராலும் அறியப்பட்டவர் அஸ்வின். ஷிவாங்கியின் லூட்டியில் திக்குமுக்காடி நிற்கும் அஸ்வினுக்கும் ரசிகர் கூட்டம் அதிகம்.
2.பாலாஜி முருகதாஸ்
மாடலிங் உலகில் பலராலும் அறியப்பட்டவர் பாலாஜி முருகதாஸ். ஆனால் ரசிகர்களின் இல்லங்களுக்கு வந்தது பிக்பாஸ் மூலம். இவர் சிங்கிளா, கமிட்டடா என்ற பல தகவல்கள் சுற்றினாலும் தான் ஒரு பக்கா சிங்கிள் என்கிறார் பாலாஜி
3.ஆர்ஜே விஜய்
தொகுப்பாளராக திரையில் முகம் காட்டியவர் ஆர்ஜே விஜய். புன்முறுவலுடன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களையும் சேர்த்துள்ளார். இவர் திரைப்படங்களுக்கு பாடலும் எழுதியுள்ளார். விரைவில் திரைக்கு வரலாம். இவர் மோனிகா தங்கராஜ் என்பவரை திருமணம் செய்துள்ளார்
4.சோம் சேகர்
தொலைக்காட்சிக்கு இவர் முகம் புதிதல்ல என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமே பலருக்கும் அறிமுகம். அமைதியும், நட்பாக பழகும் விதமும் சோம் சேகருக்கு ரசிகர் கூட்டத்தை கொடுத்துள்ளது. இவர் தற்போதுவரை சிங்கிள் தான் என்பது கூடுதல் தகவல்
5.ஆரி அர்ஜுனன்
திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஆரி. நடிகர் மட்டுமின்றி சமூக சேவை மூலமாகவும் பலருக்கும் அறிமுகம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இல்லங்களுக்கே வந்தவர் அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். இவர் நதியா என்பவரை திருமணம் செய்துள்ளார்.
6.நந்தன் லோகநாதன்
குறும்படங்கள் மூலமாக திரைக்கு அறிமுகமான நந்தன் சித்தி2 மூலம் தமிழக ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ளார். அனிதா என்பவரை திருமணம் செய்துள்ளார் நந்தன்.
7.நிதின்
இசைத்துறையில் இருந்து நடிப்புத்துறைக்கு தாவியுள்ளார் நிதின்.பெங்களூரு பையனான நிதின் ’என்றென்றும் புன்னகை ’சீரியல் மூலம் தமிழக இல்லங்களில் குடியேறியுள்ளார்.
8.சிபு சூர்யன்
ரோஜா சீரியல் மூலம் தமிழகத்திற்கு அறிமுகமானவர் சிபு சூர்யன். பெங்களூருவைச் சேர்ந்த இவர் இனி சீரியல் மட்டுமின்றி சினிமாவிலும் முகம்காட்டப் போகிறார். இவருக்கு சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவருடன் திருமணம் நிச்சயம் ஆகியுள்ளதாம்.
9.ரியோ ராஜ்
தொகுப்பாளராக திரையில் தோன்றிய ரியோ திரைப்படங்களிலும் முகம் காட்டினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காலடி எடுத்து வைத்து ஏற்ற இறக்கங்களை கண்டார். ஆனால் குறையாத ரசிகர் கூட்டத்தால் அடுத்தடுத்து பயணிக்கிறார் ரியோ. இவர் நடித்த ’ப்ளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
10.விஷ்ணு விஜய்
பல சீரியல்களிலும், படங்களிலும் முகம் காட்டியவர் விஷ்ணு. இப்போது தியா படத்தின் ரீமேக்கிலும் நடித்து வருகிறார். சத்யா சீரியல் மூலம் அமுல் பேபியாக தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார் விஷ்ணு.
உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!