மேலும் அறிய

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!

ரசிகர்களுக்கு பிடித்தமான டாப்20 சின்னத்திரை பெண்கள் 2020 என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப்  இந்தியாவின் சென்னை டைம்ஸ். சின்னத்திரையில் நீங்கள் ரசித்த பெண்களில் டாப் 10 லிஸ்டை நாம் பார்க்கலாம்.

1.ரம்யா பாண்டியன்:

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
ஜோக்கர் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்ட ரம்யா பாண்டியம் மொட்டை மாடி போட்டோ ஷூட்டிற்கு பின் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார். பக்கத்து வீட்டு பெண்ணாகவே ரசிகர்கள் மனதில் குடிகொண்டுள்ள ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் தொடர்ந்து ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்தார்.

2.ரோஷினி ஹரிபிரியன்:

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
குறும்படம், விளம்பர படங்களுக்கு டப்பிங் பேசி வந்த ரோஷினி, பாரதி கண்ணம்மாவாக ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனார். கர்ப்பிணியாக கண்ணம்மா நடந்த நடையை சோஷியல் மீடியா மீம்ஸாக்கி வைரலாக்கியது. படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இப்போதைக்கு காதலும் இல்லை, கல்யாணமும் இல்லை என்கிறார் கண்ணம்மா.

3. பவித்ராலெக்‌ஷ்மி:

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்! 
சின்னத்திரை சமந்தாவாக இப்போது வலம் வருகிறார் பவித்ரா லெக்‌ஷ்மி.  உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, மானாட மயிலாட நிகழ்ச்சிகள் மூலம் அரங்கத்தை அதிர வைத்த பவித்ரா, பின்னர் குக் வித் கோமாளி மூலம் சின்னத்திரை சமந்தாவானார். இப்போது சினிமாவிலும் முகம் காட்டத்தொடங்கி இருக்கிறார்.

4.நட்சத்திரா நாகேஷ்

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
சின்னத்திரை தொகுப்பாளினியாகவும், திரைப்படங்களுக்கான மேடைத் தொகுப்பாளினியாகவும் அறியப்பட்ட நட்சத்திரா, நாயகி சீரியல் மூலம் தமிழ்க்குடும்பங்களுக்கு அறிமுகம் ஆகியுள்ளார். கடந்த வருடம் தொழிலதிபர் ஒருவருடன் இருவருக்கு திருமண நிச்சயம் ஆகியுள்ளது

5.ஆய்ஷா

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
சத்யா சீரியலில் சிங்கப்பெண்ணாக களம் கண்டவர் ஆய்ஷா.  அழகு, துடிப்பான நடிப்பு என ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். சத்யா சிங்கிளா என்றால், இந்த ரவுடி பேபி, ஒரு அமுல் பேபியை கண்டுபிடித்து விட்டதாக தகவல்.

6.ஷிவானி நாராயணன்

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
சீரியலில் அறிமுகம் என்றாலும் இன்ஸ்டா போட்டோக்கள் மூலமே பட்டித் தொட்டி எங்கும் பேசப்பட்டவர் ஷிவானி.  மாலை 5 மணி போட்டாவுக்காக இன்ஸ்டாவில் காத்துக்கிடந்த ரசிகர்களும் ஏராளம். பிக் பாஸ் மூலமும் ஷிவானிக்கு ரசிகர் கூட்டம் உண்டு.

7.ஆல்யா மானசா

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
ராஜா ராணி செம்பாவாக தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் ஆல்யா. அந்த சீரியல் மட்டுமின்றி மற்றும் சில சீரியல்களிலும் முகத்தைக் காட்டினார். சீரியலில் நடித்த சஞ்சீவுடன் காதல் ஏற்பட்டு அவரையே திருமணம் செய்துகொண்ட ஆல்யாவுக்கு இப்போது ஆய்லா என்ற குழந்தையும் இருக்கிறது. க்யூட் குடும்பப்புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து ரசிக்க வைக்கிறார் ஆல்யா.

8.திவ்யதர்ஷினி

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
சின்னத்திரையில் 20 வருடங்களுக்கு மேலாக கோலோச்சும் திவ்யதர்ஷினி பலரின் பேவரைட் ஆங்கர். தொகுப்பாளினி, நிகழ்ச்சி தொகுப்பாளர், சீரியல் நடிகை, திரைப்பட நடிகை, குறும்படம் என டிடி பயணிக்காத இடமே இல்லையென கூறலாம். 

9.கிகி

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
மிகவும் பிஸியான தொகுப்பாளினியான கிகி இப்போது ஸ்டார் வீட்டு மருமகள். சாந்தனு பாக்யராஜை திருமணம் செய்துகொண்ட கிகி சில ஓடிடி தொடர்களில் நடித்து வருகிறார்

10.சாந்தினி தமிழரசன்

உங்க பேவரைட் யாரு? - 2020ல் ரசிகர்களை கவர்ந்த டாப் 10 சின்னத்திரை நாயகிகள்!
கோலிவுட் நடிகையாக இருந்து இப்போது சின்னத்திரையில் வலம் வருகிறார் சாந்தினி. 2019ம் ஆண்டு தாழம்பூ சீரியல் மூலம் அறிமுகமான சாந்தினி ரெட்டை ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரையில் வலம் வருகிறார்.

>> அர்ச்சனாவை வம்புக்கு இழுக்கும் சனம் ஷெட்டி!

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
திருட்டு பட்டம் கட்டிய ஊழியர்.. வேலை பார்த்த இடத்தில் நிகழ்ந்த அவமானம்.. மணிகண்டன் வேதனை!
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
அதிமுக ஆட்சியில் கண்ணீர்...தவெக ஆட்சியில் அங்கீகாரம்...நெகிழ்ச்சியில் புஷ்பவனம் குப்புசாமி
Vijay Sethupathi:
Vijay Sethupathi: "நான் சந்தோஷமா இருந்தால் காய்ச்சல் வரும்.." பத்தா வெற்றி விழாவில் விஜய் சேதுபதி

வீடியோ

மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
TN Govt: பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
பட்டினப்பாக்கம் ரத்து இல்லையா? நில வகைப்பாட்டை மாற்றிய CMDA - வணிக பயன்பாட்டில் புதிய திட்டம்?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
VS Babu Health Update: 30 நாட்களாக மருத்துவமனையில் வி.எஸ்.பாபு.. டிரக்கியாஸ் சிகிச்சையா? உண்மை நிலவரம் என்ன?
TN Govt: 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
8 கிராம் தங்கம், பட்டுப்புடவை..! அண்ணன் சீர் யார் யாருக்கு கிடைக்கும்? தமிழக அரசு அறிவிப்பு
VOC Port: நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
நாட்டிலேயே முதல்முறை..!தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.77 கோடி மெகா ப்ராஜெக்ட் - கடலில் 6.25MW மின்சாரம்
Gold Rate Today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.? இதோ இன்றைய விலை நிலவரம்
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN By Election: 600 வாக்குச்சாவடிகள்.. மதுராந்தகம், தாராபுரத்தில் இன்று இடைத்தேர்தல்.. ஓட்டுப்போட ரெடியாகிய மக்கள்!
TN Govt: கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
கரையும் கஜானா..! அரசு செலவை குறைக்க என்னவெல்லாம் செய்யலாம்? CM விஜய் புதிய முடிவு
Embed widget