HBD Anirudh: ‛கெத்தா நடந்து வர்றான்... கேட்டையெல்லாம் கடந்து வர்றான்...’ கெத்து காட்டும் அனிரூத் பிறந்தநாள் இன்று!
ஒல்லியான தேகம்.. அதிரவைக்கும் குரல்.. எகிடுதகிடு மியூசிக்.. லைவ் கான்செர்ட் என எல்லாம் கோடம்பாக்கத்தின் ராக் ஸ்டாராக உருமாற்றியது
கோபிநாத் சொல்வது போல ஒருத்தர் ஒரே நைட்டில் எல்லாத்தையும் அடிச்சு உடைச்சுட்டு மேல வருவார் அப்படினா அது அனிருத்தாகத்தான் இருக்க முடியும்.. ஆம் தமிழ் சினிமாவில் அனிருத்தின் எண்ட்ரி அப்படித்தான் இருந்தது. ‘ஒய் திஸ் கொலவெறி’ என தனுஷ் தங்கிலீஸில் வரிகளை எழுதி கொடுக்க, அதற்கு அனிருத் போட்ட மெட்டு உலகம் முழுவதும் வைரல். எண்ட்ரி ஆன முதல் பாட்டிலேயே ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கிய அனி, ‘நீ பார்த்த விழிகளில் கரையவும் ‘போ நீ போ’பாடலில் உருகவும் வைத்தார். பிண்ணனி இசையிலும் தாறு மாறு கிட்டடித்த அனிக்கு ஆரம்பமே அமர்க்களமாக அமைந்தது..
ஏதோ சின்னப்பையன், முதல் படம், எப்படியோ அமைஞ்சுபோச்சு என்ற எண்ணம் ஒரு பக்கம் இருந்தாலும், அனிருத் மீதான ஒரு பிரமிப்பு தமிழ் சினிமாவிற்கு இன்னொரு பக்கம் இல்லாமல் இல்லை. அடுத்தாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘எதிர் நீச்சல்’ - ல் தனது அடுத்தக்கட்டத்தை தொட்டிருந்தார் அனிருத். ஒரு வளர்ந்து வரும் நாயகனுக்கு எப்படி ஒரு ஆல்பத்தை கொடுக்க வேண்டுமோ அப்படி ஒரு ஆல்பத்தை கொடுத்திருந்தார் அனி.
‘பூமி என்ன சுத்துது’ என சுற்ற விட்ட அனி, லோக்கல் பாய்ஸ் பாடலில் எகிறி அடித்தார்..
படத்தின் க்ளைமேக்ஸ் மட்டுமே கிட்டத்தட்ட 15 நிமிடங்கள். முழுக்க முழுக்க மாராத்தான் சம்பந்தமான காட்சிகள்தான். ஆனால் அனைத்தையும் தனது பிண்ணனி இசையால் என்கேஜிங்காக மாற்றி இருப்பார் அனிருத்.. அடுத்ததாக கை வைத்த ‘டேவிட்’ படத்தின் ‘கனவே கனவே’ பாடலும் இளசுகளின் ரிங்டோனாக மாறிப்போனது.. என்னப்பா எல்லா பாட்டும் கிட்டா கொடுத்தா எப்படினு நினைச்சு முடிக்கிறதுக்குள்ள ‘வணக்கம் சென்னை’யில் ஆல்பம் கிட் கொடுத்து விட்டார் அனிருத்..
அப்புறம் என்ன கோடம்பாக்கம் அனிருத்தின் கதவை அடுத்தடுத்து தட்ட ஆரம்பித்தது.. ஒல்லியான தேகம்.. அதிரவைக்கும் குரல்.. எகிடுதகிடு மியூசிக்.. லைவ் கான்செர்ட் என எல்லாம் கோடம்பாக்கத்தின் ராக் ஸ்டாராக உருமாற்றியது.. இராண்டாம் உலகம் படத்திற்கு பிண்ணனி இசையமைத்து கவனம் ஈர்த்த அனியின் அடுத்த ஹிட் லிஸ்டில் வந்து ஒட்டிக்கொண்டது தனுஷின் வேலையில்லா பட்டதாரி.. ‘தடை அதை உடை’ என தெறிக்கவிட்ட அவர் அம்மா அம்மா என கரையவும் வைத்துவிட்டார்.. இந்தப்படத்தின் பிண்ணனி இசையும் எகிடுதகிடு கிட் ரகம்தான்..
அனியின் கேரியரில் மிக முக்கியமான படம் விஜயின் கத்தி.. விஜயின் குரலில் வெளிவந்த செல்பி புள்ள வைரல் ஹிட் அடிக்க, காட்சிக்கு காட்சிபிஜிஎம் -ல் இவர் காட்டிய வித்தியாசம் திரையரங்கை அதிர செய்தது. அவ்வளவுதான் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்தார் அனிருத்..
அடுத்தடுத்து அனியின் இசையில் வெளிவந்த காக்கி சட்டை, மாரி, நானும் ரெளடிதான், வேதாளம், ரெமோ,விவேகம், வேலைக்காரன் தானா சேர்ந்த கூட்டம் எல்லாமும் ஹிட் ரகம்தான்.. லதா ரஜினிகாந்தின் மருமகனாய் இருந்தாலும், ரஜினி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு என்னவோ அனிருத்துக்கு கொஞ்சம் லேட்டாக கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பான ‘பேட்ட’ யில் ஒரு ரசிகராகவே மாறி ரஜினியை கொண்டாடி தீர்த்திருப்பார் அனிருத்.
மரண மாஸ் பாடலில் மாஸ் காட்டிய அவர் இளமை திரும்புதே பாடலில் கொஞ்சவும் தவறவில்லை.. வழக்கம் போல் பிஜிஎம்லும் திரும்பி பார்க்க வைத்த அனி அடுத்து தர்பாரிலும் ரஜினியுடன் இணைந்து கலக்கினார்.. அதைத்தொடர்ந்து மாஸ்டரின் வாத்தி கம்மிங்கில் மீண்டும் உச்சம் தொட்ட அனிருத்தின் கிராப் தற்போது ‘பீஸ்ட்’ ‘விக்ரம்’ ‘இந்தியன் 2’ என எகிறிக்கொண்டிருக்கிறது..
இசை மட்டுமல்ல பாடகராகவும் முக்கியமான இடத்தில் இருக்கிறார் அனிருத்.. தனது படங்கள் மட்டுமல்லாது பிற படங்களுக்கு அனிருத் பாடி வருகிறார். ஆனால் இவர் பாடிய பாடல்கெல்லாம் ஹிட் ஆகிவிடுவதால் பிற படங்களில் தான் பாடுவதெற்கு காசு கேட்பதில்லையாம் அனிருத். இதை ஒரு செண்டிமெண்டாக மெயிண்டெயின்டாகவே செய்து வருகிறாராம்.
இசைக்கு அடுத்து அனிருத்துக்கு அதிகம் பிடித்த விஷயம் என்றால் அது கார்கள்தான்.. Lamborghini,Ferrari ரக கார்கள் என்றால் மனுஷனுக்கு கொள்ளை இஷ்டமாம். நட்பின் மீது ஆழமான நம்பிக்கை கொண்ட இவரின் நட்பு வட்டாரமும் ரெம்ப கெட்டியாம்.. தொடர்ந்து ஹிட் முகத்தையே பார்த்து வந்த அனிருத் கேரியரில் சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை பாடல்கள் காப்பி, ஆண்ரியாவுடன் முத்தம் சம்பந்தமான போட்டோ லீக் என அடுத்தடுத்து சர்ச்சைகள் எழுந்தன.. ஆனால் அனைத்தையும் விஜய் ஸ்டைலில் Ignore negativity என ஓரம் வைத்து விட்டு அடுத்த எல்லைகளை தொட ஆயத்தமாகி வருகிறார்.. இந்த ராக் ஸ்டார் அனிருத் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனி..