Watch Video: ‛ரவுடி பேபி வெளியே வரும்போது திருந்திடும்...திருந்த வெச்சிருவாங்க’ சமீபத்தில் ரிலீஸான ‛கார்த்தி’ புகழ் திவ்யா..
‛‛அக்கா சூர்யா அக்கா, பொங்கல், தீபாவளிக்கு எல்லாம் செலிபிரிட்டிய பிடிச்சுட்டு போயிடுறாங்க. பொங்கலுக்கு காலையில் வெஜ் பிரியாணி கொடுப்பாங்க; ரேசன் அரிசியில் செய்தது. அதுக்கு வெங்காயம் கொடுப்பாங்க,’’
ஒரு பொண்ணோட மனசு... இன்னொரு பொண்ணுக்கு தான் தெரியும் என்பார்கள். அது போல தான், ஒரு செலிபிரிட்டியோட மனசு... இன்னொரு செலிபிரிட்டிக்கு தான் தெரியும் போல. யார் செலிபிரிட்டி என கேட்க கூடாது. ஏனென்றால், இவர்கள் இவர்களை இப்படி தான் அழைத்துக் கொள்வார்கள். செலிபிரிட்டிகள் சூழ் உலகு இது. டிக்பாக் பிரபலங்கள், பின்னர் அது தடையான பின், யூடியூப் சேனல் நிறுவனர்கள் என இவர்களை அவர்களை ஒரு பெயர் வைத்து அழைத்துக் கொண்டு அந்த உலகத்தின் செலிபிரிட்டிகளாக செயல்பட்டனர்.
அவ்வாறு செயல்பட்டவர்கள், பொதுமக்களுக்கு இடையூறு செய்த போது தான், கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு சமீபத்தில் சிறைக்குச் சென்ற ரவுடிபேபி சூர்யா, சிக்கா என்ற சிக்கந்தர் ஆகியோரெல்லாம். இவர்களுக்கு முன்னோடியாக சிறை சென்று சமீபத்தில் வெளியான ‛ஆரப்பாளையம் கார்த்தி’ புகழ் திவ்யா, வந்ததும் வராததுமாய், ரவுடி பேபி சூர்யவுக்காக சில வீடியோக்களைவெளியிட்டுள்ளார். அதன் நோக்கம், உண்மையில் என்னவென்று தெரியவில்லை என்பதை விட புரியவில்லை என்பது தான் சரியாக இருக்கும். இருந்தாலும் தன் அனுபவங்களை அவர் சூர்யாவுக்கு அறிவுரையாக வழங்குகிறார்கள். இதோ அவை...
’’ஜெயிலுக்கு போன நானாக இருந்தாலும், மீரா மிதுனா இருந்தாலும் திருந்திவிடுவார்கள். ரவுடிபேபி சூர்யாவும் திருந்தி தான் வரும். ஒருத்தர் ஜெயிலுக்கு போனால், அவர்களை பற்றி சந்தோசப்படாதீர்கள். சூர்யாவின் குழந்தைகளை கொஞ்சம் நினைத்து பாருங்கள். சூர்யாவுக்கு பெயிலுக்கு கையெழுத்து போட அவங்க அம்மா கூட வரமாட்டாங்க. சூர்யா இருக்கிற வீட்டை காலி பண்ண சொல்லிட்டாங்களாம். எனக்கு இப்போ யாரும் வீடு தர்ல. அது மாதிரி சூர்யாவும் கஷ்டப்படக்கூடாது. போலீசை இனி தவறா பேசக்கூடாது. என்னால் கேட்ட வார்த்தை பேசாமல் இருக்க முடியாது. ஆனால் அப்படி பேசக்கூடாது என கன்னத்தில் ஒரு விடு விட்டார்கள்.
நான் 4 நாட்களாக குளிக்கவில்லை. அந்த அளவுக்கு கஷ்டம். என் கஷ்டத்தை யாரும் படக்கூடாது. சூர்யா வெளியே வரும் போது திருந்தி தான் வரணும். ஜெயிலில் அடிக்கவோ, திட்டவோ மாட்டார்கள். அங்குள்ள 200 பேருடன் நாம் இருக்க வேண்டும், அவர்களுடன் பேச வேண்டும். அது தான் கஷ்டம். நம் வீட்டில் கிடைப்பது போல அங்கு சாப்பாடு கிடைக்காது. அவ்வளவு கஷ்டமா இருக்கும். பாருங்களேன்... கண்டிப்பா சூர்யா திருந்தி தான் வரும்,’’ என ஒரு வீடியோவில் பேசியுள்ளார்.
இதோ போல, மற்றொரு வீடியோவில் சிறையில் தரும் உணவுகள் பற்றி பேசியுள்ளார். இதோ அது.
‛‛அக்கா சூர்யா அக்கா... பொங்கல், தீபாவளிக்கு எல்லாம் செலிபிரிட்டிய பிடிச்சுட்டு போயிடுறாங்க. பொங்கலுக்கு காலையில் வெஜ் பிரியாணி கொடுப்பாங்க; ரேசன் அரிசியில் செய்தது. அதுக்கு வெங்காயம் கொடுப்பாங்க. மதியம் சக்கரை பொங்கல் கொடுப்பாங்க. நல்லா சாப்பிடுக்கா. புதன் கிழமை நான் உள்ளே போனேன், இந்த புதன் கிழமை தான் வெளியே வந்தேன். உதயநிதி பிறந்தநாளன்று கைதிகள் எல்லோருக்கும் சிக்கன் பிரியாணி கொடுத்தாங்க. திங்கள் கிழமை பெயில் கிடைக்காததால், செவ்வாய், புதன் சாப்பிடாமல் இருந்தேன். புதன் கிழமை 4 மணிக்கு பெயில் கிடைத்ததும், குடுகுடுனு ஓடியாந்துட்டேன்,’’ என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்