”கைகொடுப்போம் நாங்களெல்லாம் நல்லவன்தான்” - பல்லவன் பஸ்ஸில் கல்லூரி கால நண்பர்களுடன் கார்த்தி!
அரும்பு மீசையில் கார்த்தியை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்ய துவங்கிவிட்டனர்.
அப்பா, அண்ணன் என கோலிவுட் சினிமாவில் அதிகாரமிக்க நடிகர்கள் இருந்தாலும், தனது தனித்திறமையால் முன்னேறியவர் நடிகர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படம் மூலம் அறிமுகமான கார்த்தி தனது முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் உள்ளம் கவர்ந்தவர். அதன் பிறகு பையா, மெட்ராஸ், கைதி , கடைக்குட்டி சிங்கம், தோழா என பல வெற்றிப்படங்களை கொடுத்தார். கார்த்தி சினிமா துறைக்கு வந்து 15 வருடங்கள் நிறைவடைந்ததையடுத்து ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கும் பருத்தி வீரன் திரைப்பட குழுவினருக்கும் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை ஷேர் செய்திருந்தார்.
View this post on Instagram
இந்த நிலையில் கார்த்தியின் மற்றொரு புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது. சில மாதங்களுக்கு முன்னதாக கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் கல்லூரி கால புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். தனது கல்லூரி நண்பர்களுடன் பல்லவன் பேருந்துக்குள் அமர்ந்திருந்திருக்கிறார் கார்த்தி. அரும்பு மீசையில் கார்த்தியை பார்த்த ரசிகர்கள் அதனை வைரலாக ஷேர் செய்ய துவங்கிவிட்டனர். அதற்கு கேப்ஷனாக “ பல்லவன் , சென்னை மக்களின் நம்பிக்கைக்குரிய நண்பன். பேருந்திலேயே கழிந்த கல்லூரி நாட்கள் அது “ என குறிப்பிட்டிருக்கிறார்.
View this post on Instagram
கார்த்தி தற்போது மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் , முத்தையா இயக்கத்தில் விருமண் , மித்ரன் இயக்கத்தில் சர்தார் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.